80 களில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன், சாருஹாசனின் மகள் சுஹாசினி.
நடிப்பில் தனக்கென தனி முத்திரை பதித்தது மட்டும் இன்றி, தயாரிப்பாளர் இயக்குனர் என பல்வேறு பரிமாணங்களில் தன்னுடைய திறமையை தமிழ் திரையுலகில் நிரூபித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு', 'பாலைவனச்சோலை', 'சிந்து பைரவி', ஆகிய படங்கள் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
1988 -ல் இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஒரு மகன் உள்ளார்.இந்நிலையில் இவர் 43 வருடங்களுக்குப் பின் மீண்டும் மேடையில் பரதம் ஆடியுள்ளார்.
நடிகை சுஹாசினி இதற்கு முன் 1976-ல் அதாவது அவர்களுடைய 13 வயதில் பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்தார். அதையடுத்து சில மேடை நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் ஆடியுள்ளார்.
நடிகை சுகாசினி 1980இல் இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
முதல் படம் என்று தெரியாத அளவிற்கு சுகாசினி கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்க, இவரின் நடிப்பு பிரபலமாக பேசப்பட்டது.இந்நிலையில் 40 ஆண்டுகளை கடந்தும் "நெஞ்சத்தைக் கிள்ளாதே" திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பொக்கிஷமாக இருந்து வருகிறார்.
சுகாசினி "நெஞ்சத்தைக்கிள்ளாதே" திரைப்படத்தின் போஸ்டருக்காக அப்போது எடுக்கப்பட்ட தன்னுடைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது நெஞ்சத்தைக் கிள்ளாதே பட ரசிகர்களுக்கு வியப்பை கொடுத்ததோடு இப்பொழுது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.





