"திரிஷா போல அதை காட்டி நடிக்க மாட்டேன்.." - வெளிப்படையாக கூறிய கீர்த்தி சுரேஷ்..!


நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். 
 
மேலும், சிவகார்த்திகேயன் ரெமோ திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியாகிய சில திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தன அதனால் தெலுங்கு பக்கம் சென்றார், அங்கு தெலுங்கில் ஹிட்டடித்தால் பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. 
 
அதனைத் தொடர்ந்து நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் செம ஹிட் அடித்தது, அதுமட்டுமில்லாமல் 60 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. 
 
அறிமுகமான புதிதில் கீர்த்தி சுரேஷ் புசுபுசுவென நாட்டுக்கட்டையாக இருந்தார். தற்பொழுது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக டவுன் கட்டையாக மாறியுள்ளார்.
 
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
 
முன்னதாக, நடிக்க தெரியாத நடிகை என கலாய்த்தவர்களுக்கு மத்தியில் முன்னாள் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் மகாநதி என்ற படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த படம் சுமார் 60 கோடி வரை வசூல் செய்தது.
 

சமீபத்தில், பேட்டி ஒன்றில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், நான் நடிகை த்ரிஷா அவர்களின் காலடிகளை பின்தொடர்ந்து சினிமாவில் பயணிப்பேன் என்று கூறினார். ஆனால், த்ரிஷாவை போல கவர்ச்சியாக உடலை காட்டி நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதாவது, த்ரிஷாவை போல நீண்டநாட்கள் சினிமாவில் இருப்பேன் என்றும் ஆனால், த்ரிஷா அளவிற்கு கவர்ச்சி காட்ட மாட்டேன் என்றும் கூறியுள்ளார் கீர்த்தி.

"திரிஷா போல அதை காட்டி நடிக்க மாட்டேன்.." - வெளிப்படையாக கூறிய கீர்த்தி சுரேஷ்..! "திரிஷா போல அதை காட்டி நடிக்க மாட்டேன்.." - வெளிப்படையாக கூறிய கீர்த்தி சுரேஷ்..! Reviewed by Tamizhakam on November 01, 2020 Rating: 5
Powered by Blogger.