பிகினி உடையில் கடலுக்கடியில் கணவருடன் ரொமான்ஸ் - சிங்கிள்ஸின் எரிச்சலை கிளப்பிய காஜல் அகர்வால்..!


தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக ஜெயம் ரவியுடன் ‘கோமாளி’ படத்தில் நடித்திருந்த காஜல் அகர்வால் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
 
நடிகை காஜல் அகர்வால் கடந்த மாதம் 30-ந் தேதி தொழில் அதிபர் கவுதம் கிட்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் புதிதாக வாங்கிய வீட்டிலும் குடியேறினார். 
 
கொரோனா அச்சுறுத்தலால் தேனிலவை தள்ளிவைக்க முடிவு செய்து இருந்தார். ஆனால் திடீரென்று அந்த எண்ணத்தை மாற்றி மாலத்தீவுக்கு சென்று விட்டார். அங்குள்ள சொகுசு விடுதியில் கணவருடன் தங்கி தேனிலவை கொண்டாடினார். 
 
கடற்கரையில் கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். கடலுக்கு அடியில் கண்ணாடி கூண்டுக்குள் படுக்கை அறையில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தையும், மீன்களை ரசித்து பார்க்கும் புகைப்படத்தையும் பகிர்ந்தார். 
 
அந்த புகைப்படங்கள் வைரலானது. காஜல் அகர்வாலின் தேனிலவு செலவு தொகை சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகி உள்ளது. 4 நாட்கள் மாலத்தீவில் தேனிலவை கொண்டாடியதாகவும், இதற்கு அவர் மொத்தம் ரூ.40 லட்சம் செலவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இதை அறிந்த ரசிகர்கள் தேனிலவுக்கு இவ்வளவு செலவா? என்று சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். 
 
அந்த வகையில் காஜலும் கௌதமும் தற்பொழுது கடலுக்கு அடியில் பிகினி ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சிங்கிள்ஸ்களை வெறுப்பேற்றி உள்ளார் காஜல். 
 
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 
மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர், ‘போட்டோ பார்க்க கொஞ்சமாச்சும் டைம் குடுங்க மேடம்’ என்று தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பிகினி உடையில் கடலுக்கடியில் கணவருடன் ரொமான்ஸ் - சிங்கிள்ஸின் எரிச்சலை கிளப்பிய காஜல் அகர்வால்..! பிகினி உடையில் கடலுக்கடியில் கணவருடன் ரொமான்ஸ் - சிங்கிள்ஸின் எரிச்சலை கிளப்பிய காஜல் அகர்வால்..! Reviewed by Tamizhakam on November 16, 2020 Rating: 5
Powered by Blogger.