வேறு பெயரில் ரீ-என்ட்ரி - கெத்து காட்டும் தமிழ்ராக்கர்ஸ்..!


சினிமாத் துறையை படாதபாடு படுத்தி வரும் தமிழ் ராக்கர்ஸ், ஓடிடி-யில் வெளியாகும் படங்களையும் உடனுக்குடன் வெளியிட்டு பட வெளியீட்டாளர்களை அதிர வைக்கிறது.
 
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாரான படம் சூரரைப் போற்று. கடந்த அக்டோபரில் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய இந்தப் படம், கொரோனா காரணமாக தாமதமானது. 
 
சுமார் 20 கோடி பட்ஜெட்டில் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யவே சூர்யா ஆர்வமாக இருந்தார்.ஆனால் கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் திறப்பு தள்ளிக்கொண்டே போனதால், ஓடிடி-யில் வெளியிட ஒப்புக்கொண்டார். 
 
விஜய்யின் மாஸ்டர் படத்தை ஓடிடி-யில் வெளியிட விஜய் தரப்பு ஒப்புக் கொள்ளாததால், ஏதாவது ஒரு பெரிய நடிகரின் படத்தை திரையிட்டு சினிமா மார்க்கெட்டை தங்கள் பக்கம் திருப்ப வேண்டிய நெருக்கடியில் ஓடிடி நிறுவனங்கள் இருந்தன.
 
இந்தச் சூழலில்தான் சூரரைப் போற்று படத்தை 45 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி ரூ15 கோடிக்கு பெற்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 
 
இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்திருக்கும் வெளியீட்டாளர்களை அதிரவைக்கும் விதமாக பைரசி வெப்சைட்கள் ரிலீஸான சூட்டோடு சூடாக சூரரைப் போற்று திரைப்படத்தை சட்டவிரோதமாக தங்கள் இணையதளங்களில் வெளியிட்டன. 
 
இந்நிலையில், கடந்த மாதம் அமேசான் ப்ரைம் நிறுவனத்தின் தொழில்நுட்ப குழு தமிழ்ராக்கர்ஸ் இணையத்தை முடக்கிப்போட்டது. இதனால், இணையத்தில் புது படங்களை பார்க்கும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 
 
இந்நிலையில், தற்போது மீண்டும் " TAMIL BLASTERS" என்ற இணையத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர் தமிழ்ராக்கர்ஸ். இது நிஜமாகவே தமிழ் ராக்கர்ஸ் குழு செய்த வேலை தானா.? அல்லது வேறு யாராவது இயக்குகிறார்களா என்ற விபரம் தெரியவில்லை.

வேறு பெயரில் ரீ-என்ட்ரி - கெத்து காட்டும் தமிழ்ராக்கர்ஸ்..! வேறு பெயரில் ரீ-என்ட்ரி - கெத்து காட்டும் தமிழ்ராக்கர்ஸ்..! Reviewed by Tamizhakam on November 29, 2020 Rating: 5
Powered by Blogger.