திரிஷா கவர்ச்சி தாண்டவம் - மிரண்டு போன தணிக்கை குழு - ஆனால், இப்போது அனைத்தும் ரசிகர்களின் கண்களுக்கு..!


திரிஷா நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தப் படத்தில், ரஜினி ஜோடியாக நடித்தார் த்ரிஷா. ரஜினிக்கு ஜோடி என்றாலும், கிட்டத்தட்ட கொஞ்சம் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றம் போலத்தான் அவரது கதாபாத்திரம் இருந்தது.
 
தற்போது, மணிரத்னம் இயக்கிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி ஜோடியாக அவர் நடிக்கிறார். 
 
இவர்கள் சம்பந்தப்பட்டக் காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கத் திட்டமிட்டுள்ளார் மணிரத்னம். 2018-ம் ஆண்டு வெளியான ‘96’ படத்தைத்தான் த்ரிஷாவின் கடைசிப் படமாக எடுத்துக்கொள்ள வேண்டும். 
 
இந்தப் படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், இன்னும் ஜானுவாக த்ரிஷாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் காதலர்கள்.
 
இந்நிலையில், த்ரிஷா நடிப்பில் பல நாட்களாக ரிலீஸுக்குக் காத்திருக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படம், பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு இப்போது வெளியாகும், அப்போது வெளியாகும், எப்போதும் வெளியாகும் என்றே தெரியாமல் முடங்கிப்போனது. 
 
திருஞானம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி, ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
தற்போது, பல திரைப்படங்கள் OTT தளங்களை நோக்கி படையெடுக்கின்றன. அந்த வகையில், இந்த பரமபத விளையாட்டு திரைப்படமும் OTTயில் வெளியாகவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதாம். 
 
ஏற்கனவே, படம் வெளியீடு ஆண்டு கணக்கில் தள்ளிப்போகவே மேற்கொண்டு சில கவர்ச்சி காட்சிகளை படத்தில் வம்படியாக கோர்த்து விட்டார்கள் என்ற தகவல் வெளியானது. 
 
திரிஷாவின் கவர்ச்சி தாண்டவத்தை பார்த்து மிரண்ட தணிக்கை குழுவினர் பல காட்சிகளை வெட்டி வீசினார்கள். ஆனால், தற்போது OTT தளத்திற்கு எந்த விதமாக சென்சார் பிரச்சனையும் இல்லை என்பதால் திரிஷா காட்டிய மொத்த கவர்ச்சியையும் அம்மி பிசகாமல் ரசிகர்களின் கண்களுக்கு கொண்டு வந்து சேர்க்கவுள்ளனர் படக்குழுவினர்.

திரிஷா கவர்ச்சி தாண்டவம் - மிரண்டு போன தணிக்கை குழு - ஆனால், இப்போது அனைத்தும் ரசிகர்களின் கண்களுக்கு..! திரிஷா கவர்ச்சி தாண்டவம் - மிரண்டு போன தணிக்கை குழு - ஆனால், இப்போது அனைத்தும் ரசிகர்களின் கண்களுக்கு..! Reviewed by Tamizhakam on November 09, 2020 Rating: 5
Powered by Blogger.