தன் உருவத்தை பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசிகருக்கு மஞ்சிமா மோகன் பதிலடி..!

 
மலையாளத்தில் நிவின்பாலி ஜோடியாக ஒரு வடக்கன் செல்பி படத்தில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். தமிழில் கௌதம் மேனன் டைரக்சனில் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்த இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் உள்ளது என கணித்தார்கள் ரசிகர்கள்.
 
ஆனால், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு அம்மணிக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. தற்போது, கைவசம் விஜய்சேதுபதியுடன் "துக்ளக் தர்பார்" மற்றும் விஷ்ணு விஷால் ஜோடியாக "எஃப்.ஐ.ஆர்" ஆகிய படங்கள் மட்டுமே உள்ளன. 
 
இந்த நிலையில் கடந்த மாதம், எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கிய மஞ்சிமா மோகனுக்கு காலில் முறிவு ஏற்பட்டது இதையடுத்து சிறிய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். 
 
இப்படி ஒய்வு நேரத்தில் ஒரு புதிய உண்மையையும் அதனால் தனக்கு கிடைத்த ஆறு பலன்களையும் கண்டுபிடித்து, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பட்டியலிட்டு பகிர்ந்துள்ளார். 
 
அதாவது தொடர்ந்து காபி குடித்து வந்த மஞ்சிமாவுக்கு, காபி குடிப்பதன் மூலம், நகைச்சுவை உணர்ச்சி, தைரியம், வில்பவர், முழு வாக்கியங்களில் பேசும் திறன் , தனக்கு ஞாபகப்படுத்தப்பட வேண்டிய அப்போதைய விஷயம் மற்றும் பொறுமை என ஆறு பலன்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் மஞ்சிமா மோகன். 


இதை வைத்து பார்க்கும்போது, சமீபத்தில் கீர்த்தி சுரேஷை வைத்து டீயை மையப்படுத்தி ஒரு போட்டோ ஷூட் எடுத்தது போல, மஞ்சிமாவிடம் காபியை மையப்படுத்தி அணுகினால், உடனே ஒகே சொல்லிவிடுவார் போல தெரிகின்றது.
 
நீண்ட நாட்களாக வீட்டிலேயே இருந்த மஞ்சிமா தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா விழிப்புணர்வு குறித்து ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். ''மக்களுக்கு வீட்டில் இருப்பது ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள்'' என்று பதிவிட்டிருந்தார். 
 
மஞ்சிமாவின் இந்தப் பதிவிற்கு ரசிகர் ஒருவர், ''மஞ்சிமாவின் உருவம் குறித்து அநாகரிகமான முறையில் ஒரு கருத்தை கூறியதுடன், நீயா எங்களுக்கு உணவளிப்பாய்?'' என்று கேட்டிருந்தார். 
 
அந்த ரசிகருக்கு தனது மற்றொரு பதிவில் மஞ்சிமா பதிலடி கொடுத்திருந்தார். அந்தப் பதிவில், ''நம்மிடையே இப்படிப்பட்ட நபர்களும் இருக்கிறார்கள். வழக்கமாக இதுபோன்ற ட்வீட்களுக்கு நான் பதில் சொல்வதில்லை. ஆனால், மக்களை வீட்டில் இருக்கச் சொன்னதற்கு எனக்குக் கிடைத்தது இதுதான். 
 
வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பது யாருக்கும் மிகவும் எளிதான ஒன்று நீங்கள் கருதுவீர்களானால், நீங்கள் நினைப்பது தவறு ப்ரோ. பணம் நமக்கு வானத்திலிருந்து கொட்டுவதில்லை'' என்று மஞ்சிமா மோகன் தெரிவித்தார்.

தன் உருவத்தை பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசிகருக்கு மஞ்சிமா மோகன் பதிலடி..! தன் உருவத்தை பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசிகருக்கு மஞ்சிமா மோகன் பதிலடி..! Reviewed by Tamizhakam on November 21, 2020 Rating: 5
Powered by Blogger.