தலைவன் அட்லிக்கே டஃப் கொடுப்பீங்க போல.. - ரசிகர்களின் பல்பு வாங்கிய நயன்தாரா..!


2003-ல் மனசினக்கரே என்கிற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா. 2005-ல் தமிழில் அறிமுகமான ஐயா வெளிவந்தது. அவ்வளவுதான். 
 
அந்தப் புத்தம் புதிதான அழகைத் தமிழ் ரசிகர்கள் அள்ளிக் கொண்டார்கள். ஒரு வார்த்தை பேச ஒரு நிமிஷம் காத்திருந்தேன் பாடல் நயன்தாரா தமிழ் ரசிகர்களின் மனத்தில் நன்குப் பதிய மிகவும் உதவி செய்தது.
 
‘டயானா மரியம் குரியன்’ என்கிற இயற்பெயரைக் கொண்ட, சிரியன் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவருக்கு, ‘நயன்தாரா’ என்கிற புதிய பெயரைச் சூட்டியது திரையுலகம். நட்சத்திரத்தின் கண்கள் என்று இதற்கு அர்த்தம். 
 
மிலிந்த்ராவ் இயக்கத்தில், கதைநாயகியாக நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் படத்தின் ‘டீசர்’ சமீபத்தில் வெளியானது. படத்தை, ‘ரவுடி பிக்சர்ஸ்’ சார்பில், விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். 
 
நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். இருவரும் ஒன்றாக இணைந்த புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிடுவார் விக்னேஷ் சிவன். 
 
காதல் பற்றிய மறைமுகப் பதிவுகளும் அவ்வப்போது வெளிவரும். தன்னுடைய வருங்காலக் குழந்தைகளின் தாயான நயன்தாராவுக்கு வாழ்த்துகள் என சமீபத்தில் அன்னையர் தினத்துக்காக வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
 
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நெற்றிக்கண் டீசர், கொரியன் படமான, பிளைண்டு படத்தில் இடம்பெற்ற காட்சிகளை போலவே இருந்தது. படத்தின் போஸ்டரும் அப்படியே இருந்ததால், தலைவன் அட்லிக்கே டஃப் கொடுப்பீங்க போல.. என பலரும் கிண்டலடிக்க துவங்கிவிட்டனர்.
 
இந்நிலையில், நெற்றிக்கண் கொரியன் படமான பிளைண்டு படத்தின், ‘ரீமேக்’ என, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து பல்பு வாங்கியுள்ளது.

தலைவன் அட்லிக்கே டஃப் கொடுப்பீங்க போல.. - ரசிகர்களின் பல்பு வாங்கிய நயன்தாரா..! தலைவன் அட்லிக்கே டஃப் கொடுப்பீங்க போல.. - ரசிகர்களின் பல்பு வாங்கிய நயன்தாரா..! Reviewed by Tamizhakam on November 20, 2020 Rating: 5
Powered by Blogger.