"இதெல்லாம் ரொம்ப ஓவர் பா..." - காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் நெட்டிசன்கள்..!


தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் காஜல்அகர்வால். இவர் சூர்யா, விஜய், அஜித், கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்றி பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். 
 
மேலும் கடந்த 30 ஆம் தேதி காஜல் அகர்வாலுக்கும், தொழிலதிபரான கௌதம் கிட்சலு என்பவருக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது என்பது நாம் அறிந்ததே. அதற்குப்பிறகு காஜல் அகர்வால் தன்னுடைய காதல் கணவருடன் மும்பையில் உள்ள புதிய வீட்டில் செட்டில் ஆகி இருக்கிறார். 
 
அந்தப் புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார் காஜல். இந்தநிலையில் காஜல் அகர்வால் தன்னுடைய காஸ்ட்லியான ஹனிமூனுக்காக செலவிட்ட தொகையைப் பற்றிய விபரம் இணையத்தில் தீயாய் பரவி, ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளது. 
 
அதாவது காதல் கணவருடன் காஜல் அகர்வால் ஹனிமூனுக்காக மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கிருந்தும் பல புகைப்படங்களை இணையத்தில் அவ்வப்போது வெளியிட்டு ஹனிமூனையும் ஒரு போட்டோ ஷூட் போலவே மாற்றிவிட்டார். 
 
இவ்வாறு ஆடம்பர ஹோட்டல்களில் தங்கி, தன்னுடைய ஹனிமூனை ஜாலியாக என்ஜாய் செய்து வரும் காஜல், தன்னுடைய ஹனிமூனுக்காக எவ்வளவு செலவு செய்து உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. 
 

என்ன இருந்தாலும் இது ரொம்ப ஓவர் பா

 
இந்த ஹனிமூனுக்காக ரூபாய் 40 லட்சம் செலவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதைக் கேட்ட ரசிகர்கள் பலர் ஆச்சரியப்பட்டதோடு, ‘ஹனிமூனுக்கு இவ்வளவா’ என்று ஆச்சரியம் அடைந்துள்ளனர். என்ன இருந்தாலும் ஹனி மூனுக்கு நாப்பது லட்சம் என்பது ரொம்ப ஓவர் பா என்கிறார்கள் நெட்டிசன்கள்.
 

பத்து நாட்களுக்கும் மேலாக அங்கிருக்கும் காஜல் அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். நேற்று கடலுக்கு அடியில் கணவர் கௌதமுடன் நீச்சலடிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “கடலுக்கு அடியில் தனிமையில் இருங்கள். நீங்கள் உணராத கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்து கொள்வீர்கள். நான் கடலை நேசிக்கிறேன். எப்போதும் நீல நிறத்தை விரும்புவேன். மிகவும் அமைதியானது, அதோடு பயமும் உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார். 
 
சிரஞ்சீவியுடன் அடுத்து அவர் நடிக்க வேண்டிய ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்விட்டதால் தன்னுடைய தேனிலவு நாட்களை நீட்டித்துவிட்டார் காஜல்.

"இதெல்லாம் ரொம்ப ஓவர் பா..." - காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் நெட்டிசன்கள்..! "இதெல்லாம் ரொம்ப ஓவர் பா..." - காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on November 19, 2020 Rating: 5
Powered by Blogger.