நடுக்கடலில் தேனிலவு - புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள்ஸ் வயிற்றில் புகையை கிளப்பும் காஜல் அகர்வால்..!

 
நடிகை காஜல் அகர்வாலுக்கும், தொழிலதிபர் கவுதம் கிட்சுலு என்பவருக்கும் கோலாகலமாக்கத் திருமணம் நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 
 
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.காஜல் அகர்வால், தமிழில் தற்போது இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். 
 
அக்டோபர் 30 ஆம் தேதி திருமணமான, புதுமண தம்பதி, காஜல் அகர்வால் - கெளதம் கிட்சிலு ஜோடி தற்போது ஹனிமூன் சென்றுள்ள நிலையில் அங்கு கடலுக்கு நடுவே காஜல் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சில நிமிடங்களிலேயே லைக்குகளை குவித்து வருகிறது.
 
35 வயதிலும் தமிழ், தெலுங்கும், இந்தி சினிமாவை கலக்கியவர் காஜல் அகர்வால். கடந்த 30ம் தேதி தனது காதலரும், தொழிலதிபருமான கெளதம் கிட்சிலுவை கரம் பிடித்தார். மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களுடன் திருமணம் நடைபெற்றது. 
 
இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என 50 பேர் மட்டுமே பங்கேற்றனர். கடந்த 7 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்த காஜல் - கெளதம் ஜோடி கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 
 
 
இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நல்ல படியாக முடிந்தது.திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க முடிவு எடுத்துள்ளதாலும், கொரோனா பிரச்சனை காரணமாகவும் காஜல் அகர்வால் தேனிலவை தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
 
 
மாலத்தீவில் இருவரும் தங்களுடைய தேனிலவை மகிழ்ச்சியாக அனுபவித்து வரும், சில புகைப்படங்களை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அது வைரலாக சென்றது. 
இதை தொடர்ந்து கடலுக்கு நடுவே, தேனிலவு கொண்டாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நடுக்கடலில் தேனிலவு - புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள்ஸ் வயிற்றில் புகையை கிளப்பும் காஜல் அகர்வால்..! நடுக்கடலில் தேனிலவு - புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள்ஸ் வயிற்றில் புகையை கிளப்பும் காஜல் அகர்வால்..! Reviewed by Tamizhakam on November 10, 2020 Rating: 5
Powered by Blogger.