திரையுலகில் பெரிய நடிகைகள் கவர்ச்சியாக நடித்தால் அதை ரசிக்கும் ரசிகர்கள். சிறிய நடிகைகள் நடிக்கும் போது மட்டும் தவறாக பேசுவது ஏன் என்று நடிகை நீபா கேட்டுள்ளார்.
துணை நடன இயக்குனரும் சின்னத்திரை நடிகையுமான நீபா அண்மையில் தான் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் இதை பற்றி மனம் உருக பேசியுள்ளார். நீபா பேசியது "நடிப்பு என்பது யார் கூட நடிக்க சொன்னாலும் நான் நடிப்பேன்.
ஆனால் எனக்கு ஒரு சிறிய கோரிக்கை உள்ளது. நான் இதை எல்லா பேட்டிகளிலும் சொல்லிக்கொண்டு வருகிறேன். அது என்னவென்றால் கவர்ச்சியாக நடிப்பவர்களை தவறாக எண்ணவேண்டாம்.
அந்த நடிகைகள் எந்த கஷ்டமான சந்தர்ப்பத்தில் நடித்திருப்பார்கள் என்று இவர்களுக்கு தெரியாது. ஆனால் இவர்கள் தவறாக பேசி விட்டு போய் விடுகிறார்கள். மேலும், பேசிய நீபா " தற்போது திரையுலகில் கவர்ச்சி என்பது முன்னணி நடிகைகளே செய்ய துவங்கி விட்டனர்.
முன்னணி நடிகைகளை தவறாக கமெண்ட் செய்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் என்னை போல் இருக்கும் நடிகைகள் கவர்ச்சியாக நடித்தால் தவறாக பேசுவது மிக வருத்தமாக இருக்கிறது. அவர்களை பற்றி தெரியாமல் யாரும் தவறாக பேச வேண்டாம்.
நீங்கள் போடும் அந்த ஒரு கமெண்ட் அவர்களை மட்டும் பாதிக்காது அவர்களின் குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கும். இப்போ நான் அந்த கமெண்டை படிப்பேன் பிறகு எனது கணவர் படிப்பார் பின்பு என் குழந்தைகள் படிப்பார்கள் அது எந்த அளவிற்கு அவர்களுக்கு துன்பத்தை தரும் என்று உங்களுக்கு தெரியுமா". என்று விசும்பினார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், தற்போது உடலை இறுக்கி பிடித்திருக்கும் உடையில் படகில் இருந்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.





