வெளியானது சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூராய்வு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தொடங்கியது. ஒன்றரை மணிநேரம் இரு மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்துவந்த நிலையில், அந்த நடைமுறை தற்போது முடிவடைந்திருக்கிறது. 
 
சித்ராவின் உடற்கூராய்வு முடிந்துவிட்டதால், உடல் அவரது குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டு, கோட்டூர்புரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஊர்வலமாக எடுத்து சென்று பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
உடற்கூராய்வு முடிவுகளை வைத்து விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றாலும், சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்த வழக்கில் அவரது கணவர் ஹேமந்த் ரவி மற்றும் உறவினர்களுக்கு சம்மன் அளித்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
 

போலீஸ் தரப்பில் கூறுவது என்ன..?

 
  • படப்பிடிப்பு தளத்தில் சித்ராவுடன் நெருக்கமான நட்பு வட்டத்தில் இருந்தவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவருகிறது காவல்துறை.
  • சித்ரா உயிரிழந்த வழக்கில் அவருடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்தவர்களுக்கு சம்மன் அளிக்க காவல்துறை முடிவெடுத்துள்ளது. 
  • சமீபகாலமாக சித்ரா தொலைபேசி மூலம் யாருடன் அதிகமாக பேசியிருக்கிறாரோ அவர்களுக்கெல்லாம் சம்மன் அளித்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. 
  • சித்ராவினுடைய நண்பர்கள், உறவினர்களையும் அழைத்து விசாரித்து, விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்த உள்ளது.
  • சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்தது தற்கொலையா அல்லது கொலையா என, காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சந்தேகத்தை அடுத்து இத்தகைய விசாரணை  தீவிரப்படுத்தி பல்வேறு கோணங்களில் விசாரிக்க திட்டமிட்டுள்ளது.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கூறுவது என்ன..?

சற்று முன் வெளியான பிரேத பரிசோதனையின் முதல்கட்ட தகவலின்படி, சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டுள்ளார் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது .மேலும், நடிகை சித்ராவின் கன்னத்தில் இருந்த நகக்கீறல்களும் அவரருடையதுதான் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

சித்ராவின் உடற்கூராய்வு முடிந்துவிட்டதால், உடல் அவரது குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டு, கோட்டூர்புரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மாலை ஊர்வலமாக எடுத்து சென்று பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல சர்ச்சைகள் நிரம்பியுள்ள இவரதுமரணம் தற்கொலை அல்ல கொலைதான் என சித்ராவின் தாயார் உட்பட பலரும் கூறி வரும் நிலையில், சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டிருக்கிறார் என்று தகவல் வந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


வெளியானது சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை - அதிர்ச்சியில் ரசிகர்கள்..! வெளியானது சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை - அதிர்ச்சியில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on December 10, 2020 Rating: 5
Powered by Blogger.