பரபரப்பாக ரெடியான போதை பார்ட்டி - சிக்கிய பிரபல புஸ்ட்டி நடிகை - அதிரடி கைது..!

 
சமீப காலமாகவே, போதை மருந்து விவகாரத்தில் நடிகர் நடிகைகளுக்கு தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் பாலிவுட் நடிகை ரியோ சக்கரவர்த்தி, கன்னட நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 
 
நடிகை ராகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், உள்ளிட்ட சில நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணையும் நடந்தது. இதை தொடர்ந்து, கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் போதை பார்ட்டி நடக்க இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. 
 
இதனை தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த போலீசார், பிரபல நடிகை உட்பட 9 பேரை கைது செய்துள்ளது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும் இந்த பார்ட்டியில், பிரபல நடிகர் - நடிகைகள் கலந்து கொள்ள இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலின் அடிப்படையில், அந்த சொகுசு ரிசார்ட்டில் போலீசார் அதிரடி சோதனை செய்தபோது, சில போதை பவுடர் வகைகள், மற்றும் மாத்திரை வகைகள் என சுமார் 7 வகையான போதை பொருட்கள் கைப்பற்றியுள்ளனர். 
 
 
இந்த சோதனையில் 9 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அதில் ஒருவர் புசு புசு புஸ்டி நடிகை என பேரெடுத்த மலையாள நடிகை பிரிஸ்டி பிஸ்வாஸ் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


 
இவர் ஒரு சில மலையாள படங்களில் நடித்துள்ளதோடு மாடலிங்கும் செய்து வருகிறார். போதை பொருள் விவகாரத்தில் மலையாள நடிகை பிரிஸ்டி பிஸ்வாஸ் கைது செய்யப்பட்டிருப்பது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பரபரப்பாக ரெடியான போதை பார்ட்டி - சிக்கிய பிரபல புஸ்ட்டி நடிகை - அதிரடி கைது..! பரபரப்பாக ரெடியான போதை பார்ட்டி - சிக்கிய பிரபல புஸ்ட்டி நடிகை - அதிரடி கைது..! Reviewed by Tamizhakam on December 24, 2020 Rating: 5
Powered by Blogger.