நடிகை சித்ரா மரணத்திற்கு முதல் நாள் இரவில் இயல்பாக இல்லை என்றும் அவரது உதவியாளரிடம் நீண்ட நேரமாக மொபைலில் பேசினார் என்றும் அவரது தோழி சரண்யா நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா.
பூந்தமல்லி அருகே ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நேற்றிரவு நடந்த படப்பிடிப்பில் அவர் பங்கேற்றார். அதன் பின் நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் விடுதியில் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேமந்த் என்பவருடன் அவர் தங்கியுள்ளார்.
தூக்கில் தொங்கிய சித்ரா
இந்நிலையில் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குளிப்பதற்காக அறையை தாழிட்டுக் கொண்டதாவும், நெடுநேரமாக திறக்காததால் விடுதி ஊழியர்கள் மூலம் மாற்றுச் சாவி கொண்டு அறையை திறந்து பார்த்ததாகவும் ஹேமந்த் தெரிவித்துள்ளார்.
அவரது மரண செய்தி அனைவரையும் அதிர்ச்சி வைத்துள்ள நிலையில் போலீசார் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, நடிகை சித்ராவின் தோழி சரண்யா அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தோழி சரண்யாவின் விளக்கம்
இது தொடர்பாக பிரபல செய்தி சேனலுக்கு சரண்யா துராடி சுந்தர்ராஜ் அளித்த பிரத்யேக பேட்டியில், “சித்ராவை எனக்கு 2 வருடங்களாக தெரியும். ஆனால், நேற்று தான் அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டோம் என்பதையே சொன்னார். தெரியும். பொதுவாக அவர் எந்த விஷயத்தையும் வெளிப்படையாக பேசக்கூடியவர்.
இந்த காதல் விவகாரத்தை மட்டும் அவர் யாரிடமும் வெளிப்படையாக பேசவில்லை. மிகவும் தனிப்பட்ட முறையிலையே வைத்திருந்தார் என்பது தான் உண்மை. கொரோனா ஊரடங்கிற்கு பின் நீண்ட நாட்கள் கழித்து தான் அவரை நான் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தேன். அப்போது முக்கிய ஆவணங்களை கொண்டு வருமாறு அவரது உதவியாளரிடம் கூறினார்.
நேற்று அவர்கள் இயல்பாக இல்லை. மிகவும் டென்ஸனாக தான் இருந்தார். எனக்கு தெரிந்து அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை. இது தற்கொலை இல்லை என்று தான் நினைக்கிறேன்.
கடைசி நாள் என்னை அவர் பார்த்த போது, அவரது எதிர்கால திட்டத்தை பற்றி நிறைய விஷயங்கள் பேசினார். அப்படி இருக்கையில் சித்ரா எப்படி தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும்“ என்றார்.
Tags
VJ Chithu