`பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகை சித்ரா, டிசம்பர் 9-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பிணமாக மீட்பு
நடிகை சித்ராவின் சடலம், கடந்த புதன்கிழமை அதிகாலையில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.
அந்த விடுதி அறையில் நடிகை சித்ராவும் அவரது கணவர் ஹேமந்தும் தங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
அவரது கன்னத்தில் நகக்கீறல்கள் இருந்ததால் அவரது மரணம் தொடர்பாக காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. மேலும், சித்ராவின் தந்தை காமராஜ், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் தனது மகளின் மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்குமாறு புகார் அளித்தார்.
சித்ரா, ஹேமந்த் இடையே பதிவுத் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடந்ததாக தெரிய வந்ததையடுத்து, விதிகளின்படி அவரது மரணம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
கடைசி படமான முதல் படம்
இந்நிலையில் சித்ரா, கால்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இது அவருக்கு முதல் படம். ஆனால் அவர் நடித்த முதல் படமே கடைசி படமாகவும் அமைந்துவிட்டது.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அதில் கம்பீரமான லுக்குடன் விஜே சித்ரா இருக்கிறார். இந்த படத்தை சபரீஷ் இயக்குகிறார். இதையடுத்து ரசிகர்கள் இந்த போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர். எஸ்.ஜெயகுமார், காவேரி செல்வி தயாரித்துள்ளனர்.
உன் கூட நான் இருக்கும் போட்டோவ அனுப்பு...
இந்நிலையில், தன்னுடன் பணியாற்றிய மதன் என்ற கலைஞருக்கு கடைசியாக ஒரு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார் சித்ரா. அதில், அவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்கிறார்.
மேலும், அவருடன் இருக்கும் புகைப்படத்தை நீண்ட நேரமாக தேடிக்கொண்டிருக்கிறேன் எனவும் ஆனால், கிடைக்க வில்லை என்றும் உன்னுடன் இருக்கும் போட்டோவை அனுப்பு நான் ஸ்டோரியில் வைக்கிறேன் என்று அவர் பேசியுள்ளார்.
சாதாரண பெண் போலவே சக நண்பர்களுடன் பழகி வந்துள்ளார் சித்ரா என்பது இந்த ஆடியோ மூலம் தெரிய வருகின்றது.