நடிகை சித்ரா மரணம் தற்கொலை தான் என உடற்கூறு ஆய்வில் உறுதியாகியுள்ளது. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 டாக்டர்கள் ஒன்றரை மணி நேரமாக நடத்திய பிரேத பரிசோதனையின் முடிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியின் ’ஸ்டார்ட் மியூஸிக்’ என்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டு புதன் கிழமை அதிகாலை அருகிலிருந்த ஹோட்டலில் தங்கி இருக்கிறார் சித்ரா. அவருடன் நிச்சயமான ஹேமந்த் ரவியும் அந்த ஹோட்டலில் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் குளிக்க போவதாக சொன்ன சித்ரா, ஹேமந்த்தை வெளியில் செல்லும் படி சொல்லி இருக்கிறார். வெளியில் வந்து வெகு நேரம் ஆகியும், சித்ரா கதவைத் திறக்காததால், ஓட்டல் ஊழியரிடம் இருந்த மாற்று சாவி மூலம் அறையைத் திறந்து பார்த்திருக்கிறார் ஹேமந்த்.
அப்போது அங்கிருந்த மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு சித்ரா, தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சின்னத்திரை நடிகர்களும், ரசிகர்களும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இதற்கடுத்த விசாரணையில் சித்ராவும் ஹேமந்தும் 2 மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்துக் கொண்டது தெரிய வந்தது. இதனால் அவரின் மரணம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று சித்ராவின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. இதன் முடிவில் அவர் தற்கொலை செய்துக் கொண்டு தான் இறந்தார் என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சீரியல் நடிகை ரேகா நாயர் சித்ரா மற்றும் அவரது கணவர் குறித்த சில பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, அவன் தொழிலதிபர் எல்லாம் கிடையாது. சொந்தமாக சட்டை கூட இல்லாத சாதாரண ஆள் தான். நண்பர்களின் சட்டையை தான் வாங்கி போட்டுக்கொண்டு சுத்துவான்.
சினிமா நிகழ்சிகளில் கலந்து கொள்வது, பிரபலங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது தான் அவன் வேலை. அவனுக்கு, சில அமைச்சர்களின் மகன்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார். ஆனால், அவரை அந்த முடிவுக்கு தூண்டியது யார். அவன் தான். ஒரு ஷூட் முடித்து விட்டு வந்த ஒரு பெண்ணை ஒரு இரண்டு மணி நேரத்தில் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு என்ன நடந்தது.
அவன் தானே கூட இருக்கான். அவள் கஷ்டத்தில் இருந்தால் நீ அவளுக்கு ஆதரித்து ஏதாவது ஆறுதல் சொல்லி இருக்கணும். ஆனா, அதை அவன் பண்ணல. அவன் ஒரு ஒன்னுத்துக்கும் உதவாத ஆள். எந்த வேலையும் செய்யாமல், பெண்களுடன் சுற்றுவது. பார்ட்டி, பப்களில் கலந்து கொண்டு பொழுதை போக்குவது தான் அவனுடைய முழு நேர வேலையே என்று கூறியுள்ளார்.
Tags
VJ Chithu