மோசமாக கமெண்ட் செய்த நெட்டிசன் - காஜல் அகர்வால் பதிலை பாருங்க..!
காஜல் அகர்வால் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். திருமணம் முடிந்த பிறகும் அப்படியே அடுத்த ரவுண்டை தொடரலாம் என்ற முடிவில் இருக்கிறார்.
இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படம் வெளியான பிறகு சூட்டோடு சூடாக படங்களில் கமிட் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் இவர் தனக்கு மட்டுமில்லாமல் ஒரு நடிகை எப்படி இருக்க வேண்டும் என சக நடிகைகளுக்கு ஒரு டிப் கொடுத்துள்ளார்.
பொதுவாக நடிகைகள் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டாலே ரசிகர்கள் பலரும் அவர்களின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவிப்பதும்.
கவிதைகள் எழுதுவதும் வாடிக்கை.
அதே சமயம், அச்சில் ஏற்ற முடியாத மிகவும் மோசமான கருத்துகளையும் சில நெட்டிசன்கள் எழுதி தான் வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில், சமூக வலைதளத்தில் நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படத்திற்கு நெட்டிசன் ஒருவர் மோசமான கமென்ட் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து காஜல்அகர்வால் கொடுத்துள்ள பதிலில், எல்லா ரசிகர்களும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. புகழ்ச்சியையும், நம்மை கொண்டாடும் ரசிகர்களையும் ஏற்றுக்கொள்ளும் நடிகைகள் இப்படியான மோசமான கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.
எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
இந்த உண்மையை பிரபலங்கள் குறிப்பாக நடிகைகள் ஒப்புக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
மோசமாக கமெண்ட் செய்த நெட்டிசன் - காஜல் அகர்வால் பதிலை பாருங்க..!
Reviewed by Tamizhakam
on
December 17, 2020
Rating:
