விஜய்சேதுபதி படப்பிடிப்பு தளத்திலிருந்து துண்டை காணோம் துணியை காணோம் என ஓடிய ஸ்ருதிஹாசன்..!


2015-ம் ஆண்டு புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். 
 
கலையரசன், ஜகபதிபாபு, சாய் தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 
 
ஊரடங்கு காரணமாக தடைபட்டிருந்த ‘லாபம்’ படத்தின் டப்பிங் பணிகள் கடந்த ஜூலை மாதத்தில் தொடங்கின. விஜய் சேதுபதி, கலையரசன் உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது டப்பிங் பணிகளை முடித்ததை அடுத்து படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. 
 
அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.கடந்த நவம்பர் மாதத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களில் படக்குழு நடத்தியிருக்கும் நிலையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றிருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. 
 
அதனால் இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை மறுத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, லாபம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகாது. அது நேரடியாக தியேட்டரிகளில் பெரிதாக ரிலீஸ் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
 
இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஹீரோயின் ஸ்ருதிஹாசன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடியுள்ளார்.
 
என்ன காரணம் என்றால், கொரோனா பரவல்இருக்கும் இந்த நேரத்தில் விஜய்சேதுபதி சூட்டிங் என்றதும் மக்கள்,இளைஞர்கள் என பலரும் படப்பிடிப்பு தளத்திற்கு கும்பலாக வந்துள்ளனர்.
 


இதனை பார்த்து அரண்டு போன ஸ்ருதிஹாசன். இப்படியான சூழ்நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் இப்படி கும்பலாக வந்துள்ளனர். இது மிகவும் ஆபத்தானது அதனால் தான் படப்பிடிப்புதளத்தை விட்டு வெளியேறினேன் என்று கூறியுள்ளார்.

விஜய்சேதுபதி படப்பிடிப்பு தளத்திலிருந்து துண்டை காணோம் துணியை காணோம் என ஓடிய ஸ்ருதிஹாசன்..! விஜய்சேதுபதி படப்பிடிப்பு தளத்திலிருந்து துண்டை காணோம் துணியை காணோம் என ஓடிய ஸ்ருதிஹாசன்..! Reviewed by Tamizhakam on December 08, 2020 Rating: 5
Powered by Blogger.