"இதோடு நிறுத்திடலாம் என்ற முடிவில் தான் இருந்தார்.." - சித்ரா குறித்து நெருங்கியவர்கள் வெளியிட்ட பகீர் தகவல்..!


சின்னத்திரை புகழ் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அவரது முகத்தில் இருக்கும் காயங்களை சுட்டிக்காட்டி இது கொலையாக கூட இருக்கலாம் என டுவிட்டரில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் சித்ரா விவகாரம் டிரெண்டிங் ஆனது.

சென்னையை சேர்ந்த சித்ரா, வீ.ஜே.வாக தனது பயணத்தை துவக்கினார். பல டிவிக்களில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர், பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' என்ற தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். 

இந்நிலையில் நேற்று(டிச.,08) இரவு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு திரும்பிய சித்ரா, அதிகாலை நேரத்தில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சித்ராவின் மறைவை பொருத்துக்கொள்ள முடியாத அவரது ரசிகர்கள் கணவர் ஹேமந்த்தை நோக்கி பல கேள்விகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் திருமணம் குறித்த குழப்பத்தில் சித்ரா இருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவுக்கும், ஹேமந்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

திருமணம் வேண்டாம்

ஆனால் சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தத்தோடு திருமணத்தை நிறுத்தி விடலாம் என்கிற எண்ணத்தில், அவர் இருந்ததாக சித்ராவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். 
 
இந்த குழப்பத்தினால் திருமண தேதியை குறிப்பதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. இதற்கிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஹேமந்த்தின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததாக முன்பே செய்திகளும் வெளியாகின. 
 
இது அனைத்திற்கும் தீர்வு காண பூந்தமல்லியில் உள்ள ஹோட்டலுக்கு ஹேமந்தின் குடும்பத்தினர் வந்திருந்ததாக தெரிகிறது. சித்ராவின் குடும்பமும் அங்குதான் இருந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
குடும்பமாக எதற்காக ஹோட்டலுக்கு வந்தார்கள் என்பது குறித்த விபரங்கள் தெரியவில்லை.அதே நேரத்தில் தனக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் ஹோட்டலில் இருந்த போதும், சித்ரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பதும் புரியவில்லை. 
 
தற்போது சித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருக்கிறது. இதற்கிடையே தனது மகள் ஹோட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய என்ன காரணம் என்பதை கண்டுபிடித்து தர வேண்டி, சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

"இதோடு நிறுத்திடலாம் என்ற முடிவில் தான் இருந்தார்.." - சித்ரா குறித்து நெருங்கியவர்கள் வெளியிட்ட பகீர் தகவல்..! "இதோடு நிறுத்திடலாம் என்ற முடிவில் தான் இருந்தார்.." - சித்ரா குறித்து நெருங்கியவர்கள் வெளியிட்ட பகீர் தகவல்..! Reviewed by Tamizhakam on December 09, 2020 Rating: 5
Powered by Blogger.