அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.
ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.
மற்ற நடிகைகளை போலவே சமீப காலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகிறார் நடிகை நந்திதா ஸ்வேதா. புதிய பட வாய்ப்புகளுக்காக தான் இப்படி கவர்ச்சி புகைப்படங்களை பதிவியேற்றம் செய்கிறார் என நெட்டிசன் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் வெளிப்படையாகவே நந்திதாவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அதாவது நடிகைகள் எப்போதும் பட வாய்ப்புக்காக தங்கள் உடலை காட்டுகின்றனர். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள். நீங்கள் அது போல் செய்கிறீர்களா?" என அந்த நெட்டிசன் கேள்வி கேட்டிருந்தார்.
இதற்கு நடிகை நந்திதா நச்சென நெத்தியடி பதில் அளித்துள்ளார். அவரது பதிவில், "முதலில் நடிகைகள் வாய்ப்புக்காக தங்களுடைய உடலை காட்டுவதில்லை. படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக அப்படி நடிக்கிறோம்", என கூறியுள்ளார்.


