"இனிமே படம் நடிக்க மாட்டேன்.." - இறப்பதற்கு முந்தைய நாள் கூறிய சௌந்தர்யா - பிரபல இயக்குனர் வேதனை..!


நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா..? இப்படி, தென்னிந்தியா முழுக்க அனைத்து மொழி மக்களாலும் கொண்டாடப்படும் நடிகைகள் மிகவும் குறைவு. 
 
அந்த வகையில் சாவித்ரிக்கு அடுத்து தென்னிந்தியா முழுக்க சூப்பர் ஹிட் நாயகியக லைக்ஸ் அள்ளியவர் செளந்தர்யா. கர்நாடகாவில் பிறந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிப்படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிகச்சிறந்த நடிகையாகக் கொண்டாடப்பட்டவர். 
 
கரியரின் உச்சத்தில் இருந்தபோதே திடீரென இதே ஏப்ரல் 17-ம் தேதி 2004-ம் ஆண்டு விமான விபத்தில் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 31. அவர் இறந்து 16 ஆண்டுகள் ஆனாலும் செளந்தர்யாவின் நினைவு அவர் ரசிகர்களைவிட்டு அகலவில்லை. 
 
நடிகர் கார்த்தி நடித்த பொன்னுமணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயாகியாக ஆர் வி உதயகுமார் தான் நடிகை சௌந்தர்யாவை அறிமுகப்படுத்தினார்.
 
இவர், 90 களில் இளைஞர்களின் கனவுகன்னியாக வலம் வந்தார். இந்நிலையில், நடிகை சௌந்தர்யா குறித்து இயக்குநர் ஆர்.வி உதயகுமார் ரகசியம் ஒன்றை சொல்லியுள்ளார்.
 
அதில் அவர் கூறியுள்ளதாவது, என்னுடைய பொன்னுமனணி படத்தில் அவரை அறிமுகப்படுத்தினேன். அடுத்ததாக சிரஞ்சீவி படத்திற்கும் அவரை நான் சிபாரிசு செய்தேன்.அதனால் என்மேல் பாசமாக எப்போதும் என்னை அண்ணா என்று அழைப்பார். 
 
அவர் இறப்பதற்கு முந்தைய நாள் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அண்ணா, உங்க கிட்ட ஒரு ரகசியம் சொல்றேன். நான் 2 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். அனேகமா, "ஆப்தமித்ரா"-தான் என்னுடைய கடைசி படம். இனிமே படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறினார். 
 
பின்னர்தான் அவர் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சென்ற போது விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார்.அதைத் தொலைக்காட்சியில் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். 
 
அவரது இறுதி மரியாதை நிகழ்ச்சிக்கு சென்ற போது அவர் புதிதாக கட்டியிருந்த வீட்டில் என் புகைப்படத்தை பார்த்து என்னையே மறந்து கண்ணீரை அடக்க முடியாமல் அழுதேன்.’ எனக் கூறி மேடையிலேயே கண்கலங்கினார்.

"இனிமே படம் நடிக்க மாட்டேன்.." - இறப்பதற்கு முந்தைய நாள் கூறிய சௌந்தர்யா - பிரபல இயக்குனர் வேதனை..! "இனிமே படம் நடிக்க மாட்டேன்.." - இறப்பதற்கு முந்தைய நாள் கூறிய சௌந்தர்யா - பிரபல இயக்குனர் வேதனை..! Reviewed by Tamizhakam on December 08, 2020 Rating: 5
Powered by Blogger.