வெற்றி நடிகரை கிழி கிழி என கிழித்த இயக்குனர்..! - அட தொயர்த்த..!


பெயரிலேயே வெற்றியை கொண்டவர் அந்த சமத்து நடிகர்.தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார். முதல் படமே ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் கொடுத்து விடுகிறார். 
 
யார் வம்பு தும்புக்கும் போவது கிடையாது என இவருக்கு இன்டஸ்ட்ரியில் நல்ல பெயர் உள்ளது. மீடியாவில் இருந்து யாரவது வம்புக்கென கேள்வி எழுப்பினால் கூட நான் அப்போது தூங்கி விட்டேன் எனக்கு எதுவும் தெரியாது என சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருப்பார். 
 
இந்த மனுஷனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா என்று நினைக்கும் அளவுக்கு நடந்துள்ளது ஒரு சம்பவம். தற்போது மணியான இயக்குனர் இயக்கம் மிகப்பெரிய வரலாற்று கதை ஒன்றில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார் நடிகர். 
 
இந்நிலையில், தன்னுடைய நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலம் சம்பந்தப்பட்ட படத்தின் ப்ரோமொஷனுக்காக வம்படியாக பெரிய முதலாளி நிகழ்ச்சிக்கு இழுத்து வந்தது அந்த படத்தை வாங்கிய OTT நிறுவனம். அவரு படம் ப்ரோமொஷனுக்கு வந்தாரு.. அடுத்த பட டைரகடருக்கு என்னவாம் என்று தானே கேட்கிறீர்கள். 
 
ஆம்.. அந்த மணியான இயக்குனர் இயக்கவுள்ள அடுத்த படத்தின் கெட்டப்பில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தான் மணியான இயக்குனரை கடுப்பேற்றியுள்ளது. நிகழ்ழ்சியை பார்த்து விட்டு உதவி இயக்குனர் ஒருவர் மணியான இயக்குனரிடம் விஷயத்தை சொல்ல வெற்றி நடிகருக்கு போன் போட்டு கிழி கிழி என கிழித்துள்ளார். 
 
ஏற்கனவே, பொதுவெளியில் இந்த கெட்டப்பில் வராதிங்க என்று பல முறை கூறியும் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் உச்ச கட்ட கோபத்திற்கு சென்றுள்ளார் மணியான இயக்குனர்.
 
சியான் நடிகரை பார்த்து கத்துக்கோங்க... அவரு இப்படித்தான் வெளிய சுத்திட்டு இருக்காரா என்று டோஸ் விட்டுள்ளார். பிறகு, ஏதோதோ காரணம் சொல்லி மழுப்பி எஸ்கேப் ஆகியுள்ளார் வெற்றி நடிகர்.

வெற்றி நடிகரை கிழி கிழி என கிழித்த இயக்குனர்..! - அட தொயர்த்த..! வெற்றி நடிகரை கிழி கிழி என கிழித்த இயக்குனர்..! - அட தொயர்த்த..! Reviewed by Tamizhakam on December 28, 2020 Rating: 5
Powered by Blogger.