"பிகினி உடையில் உச்ச கட்ட கவர்ச்சி..." - இதுவரை பலரும் பார்த்திடாத ரம்யாகிருஷ்ணனின் இளவயது புகைப்படங்கள்..!

 
தென்னிந்திய சினிமாவில் நடிப்புத் துறையை நாடி வரும் பெண்களுக்குப் பல முன்னுதாரணங்களை ஏற்படுத்தியிருப்பவரும் சினிமாவில் பெண்களுக்கு குறிப்பாக நடிகைகளுக்கு என்று வரையறுக்கப்பட்ட எல்லைகளை அவை விதிக்கும் தடைகளை உடைத்துத் தொடர்ந்து முன்னேறிச் செல்பவர் ரம்யா கிருஷ்ணன். 
 
நடிகை ரம்யா கிருஷ்ணன் மிகவும் திறமையானவர். எந்த கதாபாத்திரமானாலும் அசால்ட்டாக நடித்து முடித்து விடுவார். இவர் 80 களில் நடிகையாக வலம் வந்தவர். ஆனால் இன்றும் நடிகையாக அசத்தி கொண்டிருக்கிறார்.காலங்கள் கடந்தாலும் இவருக்கு என தனி மார்கெட் இருக்கிறது. 
 
இவருக்கு கவர்ச்சி வேடமோ, கடவுள் வேடமோ கண கச்சிதமாக பொருந்தும்.பொதுவாக நடிகையாக இருந்தால் ஒன்னு குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் அல்லது கவர்ச்சியில் காட்டு காட்டு என காட்டுவார்கள். 
 
ஆனால் ரம்யாகிருஷ்ணன் இரண்டிலையும் பலே கில்லாடி.35 வயதில் மார்கெட் இல்லாமல் காணாமல் போகும் நடிகைக்கு மத்தியில் 49 வயதிலேயும் இன்னும் கவர்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார் ரம்யாகிருஷ்ணன். சமீபத்தில்கூட ஜெயலலிதா அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்த குயின் வெப் சீரியஸில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
1970-ல் சென்னையில் பிறந்தார் ரம்யா கிருஷ்ணன். இன்றோடு அவருக்கு 50 வயது நிறைவடைகிறது. இதில் 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்,. தெலுங்கு, மலையாளம்., கன்னடம். இந்தி என ஐந்து மொழிப் படங்களில் நடித்துவருகிறார்.
 
1983-ல் வெளியான 'வெள்ளை மனசு' திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்தார். அதுவே அவர் நடித்த முதல் படம். அந்தப் படம் கவனம் ஈர்க்கத் தவறியது. 1985இல் வெளியான ரஜினிகாந்தின் 'படிக்காதவன்', 1987-ல் கமல்ஹாசனின் 'பேர் சொல்லும் பிள்ளை' உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார்.
 

90's கனவுக்கன்னி

 
 
1990-களில் தெலுங்கில் முன்னணிக் கதாநாயகியரில் ஒருவராகத் திகழ்ந்தார் ரம்யா கிருஷ்ணன். சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, மோகன்பாபு. நாகர்ஜுனா. ராஜசேகர், ராஜேந்திர பிரசாத் என முன்னணி நாயக நடிகர்கள் அனைவருடனும் நடித்து 90'ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். நாகார்ஜுனாவுடன் அவர் நடித்த பல படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. 
 
 
குறிப்பாக, அன்னமாச்சார்ய சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டி எடுக்கப்பட்ட 'அன்னமய்யா' திரைப்படம் தேசிய விருது உட்பட பல விருதுகளைக் குவித்தது. இதில் ரம்யாவின் நடிப்பும் பெரிதாகப் பாராட்டப்பட்டது. 

 

கவர்ச்சி குதிரை

 
90-களில் மலையாளம், இந்தி, கன்னடப் படங்களிலும் தொடர்ந்து நடித்துவந்தார். இந்தியில் 'கல்நாயக்', முக்கியமான படமாக அமைந்தது. அதுவரையிலான இந்தி சினிமா வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த படங்களில் இரண்டாம் இடம் பெற்றது. அமிதாப் பச்சனுடன் அவர் நடித்த 'படே மியான் சோட்டே மியான்' 1998-ல் வெளியாகி மிகப் பெரிய வெற்றிபெற்றது.


தன்னுடைய இளம் வயதில் கவர்ச்சி குதிரையாகவும், குடும்பப்பாங்கினியாகவும் நடித்து புகழின் உச்சம் தொட்டார் அம்மணி. அந்த வகையில், தன்னுடைய இளம் வயதில் பிகினி உடையில் இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் பரவி ரசிகர்களின் கவனத்தை வருகின்றன.

"பிகினி உடையில் உச்ச கட்ட கவர்ச்சி..." - இதுவரை பலரும் பார்த்திடாத ரம்யாகிருஷ்ணனின் இளவயது புகைப்படங்கள்..! "பிகினி உடையில் உச்ச கட்ட கவர்ச்சி..." - இதுவரை பலரும் பார்த்திடாத ரம்யாகிருஷ்ணனின் இளவயது புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on December 28, 2020 Rating: 5
Powered by Blogger.