ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. ! - வைரல் போட்டோஸ்..!

 
சாமி படங்களில் அம்மனாகவும், படைப்பா நீலாம்பரியாகவும், பாகுபலி சிவகாசியாகவும் பல பரிமாணங்களை எடுக்க ரம்யா கிருஷ்ணனால் மட்டுமே முடியும். 
 
51 வயதிலும் குறையாத அழகு மற்றும் இளமையுடன் வலம் வரும் ரம்யா கிருஷ்ணன் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், புடவையில் செம்ம கெத்தாக கொடுத்துள்ள போஸ்கள் தாறுமாறு வைரலாகி வருகிறது. 'பாகுபலி' திரைப்படம் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 
 
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்தியில் 'கல்நாயக்', 'க்ரிமினல்', 'ஷபத்', 'படே மியான் சோடே மியான்' உள்ளிட்ட படங்களில் நடித்திருத்துள்ளார். 
 
14 வயசில் வெள்ளை மனசு என்ற படம் மூலம் ஓய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக அறிமுகமான ரம்யா கிருஷ்ணனுக்கு தற்போது 49 வயதானாலும், அழகும், இளமையும் குறையவில்லை. 
 
அம்மன் கெட்டப்பில் எந்த அளவிற்கு வெளுத்து வாங்குகிறாரோ? அதே அளவிற்கு கவர்ச்சியிலும் பின்னி பெடலெடுத்துவிடுவார். அப்படி சிம்புவுடன் போட்டுத்தாக்கு பாட்டிக்கு ரம்யா கிருஷ்ணன் போட்ட குத்தாட்டத்தை யாரும் மறத்திருக்க முடியாது. 
 
 
அந்த ஒரே பாட்டில் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர வைத்தார்.நரசிம்மா படத்தில் ஒரு குத்து பாட்டுக்கு கவர்ச்சியாக ஆடிய நடிகை ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்ரன், தேவயானி நடித்த பஞ்சதந்திரம் படத்திலும் வைராஜா வை... உன் வலது கையை வை பாடலுக்கு கிளாமரில் பட்டையைக் கிளப்பியிருப்பார். 
 
 
பாகுபலி படத்தில் ராஜமாதவாக நடித்த அதே ரம்யா கிருஷ்ணன் தான், கடந்த ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாச நடிகையாக நடித்தார். 
 
 
பல நடிகைகள் பயந்து போய் ஒதுக்கிய அந்த கேரக்டரில் தில்லாக நடித்து பாராட்டுக்களை குவித்தார். படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி வசனம் போலவே வயசானாலும் ஸ்டைலும், அழகும் குறையாமல் ரசிகர்களை கிறங்கடிக்கிறார். 


ரம்யா கிருஷ்ணனுக்கு செம்ம மேட்சிங்கான இந்த புடவையில் பார்க்க வேற லெவலுக்கு இருக்கிறார். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. ! - வைரல் போட்டோஸ்..! ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. ! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on January 22, 2021 Rating: 5
Powered by Blogger.