ஆறு மாதத்தில் 50,000,0000 ரூபாய் கடனில் சிக்கிய முன்னணி நடிகர் - இவருக்கே இந்த நிலைமையா..?


சினிமாவை பொறுத்துவரை ஹீரோ.. ஹீரோயின்,.. இயக்குனர்.. படம் ஹிட்.. ப்ளாப்.. என்பதையெல்லாம் தாண்டி எப்போதும் முன்னணியில் இருக்கும் பிரச்சனை ஒன்று உண்டு என்றால் அது தான் பைனான்ஸ் பிரச்சனை. பொழுதுபோக்கு என்ற விஷயத்தை தாண்டி சினிமா என்பது ஒரு தொழில். ஆயிரம்.. லட்சங்கள் அல்ல. கோடிகள் புரளும் ஒரு தொழில். 
 
சினிமாவில் சிக்கி சின்னா பின்னமாகி தெருவுக்கு வந்த கோடீஸ்வரர்களும் உண்டு. அதே சினிமாவால் ஒன்றுமே இல்லாமல் வந்து திடீர் கோடீஸ்வரர்களானவர்களும் உண்டு. பெரிய குடும்பத்தில் பிறந்து நல்ல சினிமா பின்னணியுடன் வெற்றி நடை போட்டு வந்த அந்த வெளிச்சமான நடிகர் தமிழை தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்த தொடங்கினார். 
 
இருக்குறதை விட்டுட்டு பறக்குறதை பிடிக்க ஆசைப்பட்ட கணக்காக முடிந்தது நடிகரின் முடிவு. இந்தியாவே போற்றும் சூப்பர் நடிகர் கூட தமிழை தாண்டி வேறு மொழிக்கு சென்றதில்லை. ஆனால்,இந்த வெளிச்சமான நடிகர் நான் செல்வேன் என்று சென்றார். 
 

ஆப்பு அடித்த அட்ஜஸ்ட்மெண்ட்

 
அவருடைய முயற்சிக்கு பலனும் கிடைத்தது. தெலுங்கிலும் சொல்லிக்கொள்ளும் படி ரசிகர்களை சம்பாதித்துள்ளார். ஆனால், நடிக்கும் படங்களில் தெலுங்கு ரசிகர்களுக்காக, தமிழ் ரசிகர்களுக்காக பல விஷயங்களை மாற்றவும், அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும் வேண்டிய சூழ்நிலையில் சிக்கினார் நடிகர். 
 
இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடிக்காமல் போகவே தமிழில் இருந்த மார்கெட் மெல்ல மெல்ல குறைந்து படங்கள் வெற்றியடைவைதை தடுத்தன. இதனை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படமெடுக்க தயங்கினர். இதனால், சொந்த பணத்தை போட்டு படம் எடுத்தார். 
 

ஆறு மாதத்தில் 50 கோடி

 
அதிலும், ஏமாற்றமே மிஞ்சியது.. இதனால், பைனாசிற்கு பணம் வாங்கி படத்தை எடுத்து வெளியிட்டு வந்தார். இந்தா.. அந்தா என 40 கோடி ரூபாய் கடன் ஆகி விட்டது நடிகருக்கு.. இப்போது, லாக்டவுனில் அந்த கடன், அசல், வட்டி என சேர்த்து ஆறு மதத்தில் 50 கோடியாகி நடிகரின் கழுத்தை நெரிக்கும் சூழ்நிலைக்கு தள்ளி விட்டது. 
 
குடும்பமே சினிமா குடும்பம் தான் நிலைமையை சமாளித்து விடலாம் என்று எண்ணினால் தயாரிப்பாளர்கள் யாரும் இவரை வைத்து படம் எடுக்க தயாராக இல்லை. கொரோனா காலத்தில் OTT-யில் படத்தை வெளியிட்டு தியேட்டர் உரிமையாளர்களிடம் வேறு உரண்டை இழுத்து வைத்துள்ளார் நடிகர். 
 
இதனால், நடிகரின் படத்தை மறுபடியும் தியேட்டரில் திரையிட மாட்டோம் என கறார் கண்டிப்பாக கூறி விட்டனர். நடிப்பை தாண்டி ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்து வரும் இந்த நடிகருக்கே இந்த நிலைமையா...? என்று உச் கொட்டுகிறது கோலிவுட். 
 

கால் போன போக்கு

 
மேலும், கால் போன போக்குல போனா இப்படித்தான்.. தயாரிப்பாளர்கள் முன் வரவில்லை என்றால் சம்பளத்தை குறைச்சிகிட்டு நடிக்குற வேலையை மட்டும் பாக்கணும். அதை விட்டுட்டு தயாரிப்பு, நடிப்புன்னு இரட்டை குதிரை சவாரி பண்ணா இப்படி தான் ஏத்தியும் தேத்தியுமா ஓடும் என்று நடிகரின் முந்திரிக்கொட்டை தனத்தை சுட்டிக்காட்டவும் செய்கிறார்கள் சிலர்.
 
50 கோடி என்று இருக்கும் போதே எப்படியாவது கடனை திருப்பி கொடுத்துவிடுவது தான் சிறந்தது. ஒரு வருசம் போனால் இதே கடன் 70, 80 கோடி என மாறிவிடும் என நடிகரை எச்சரிக்கவும் செய்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.

ஆறு மாதத்தில் 50,000,0000 ரூபாய் கடனில் சிக்கிய முன்னணி நடிகர் - இவருக்கே இந்த நிலைமையா..? ஆறு மாதத்தில் 50,000,0000 ரூபாய் கடனில் சிக்கிய முன்னணி நடிகர் - இவருக்கே இந்த நிலைமையா..? Reviewed by Tamizhakam on January 04, 2021 Rating: 5
Powered by Blogger.