"என்ன கன்றாவி டா இது...?!!?" - காதல் சந்தியாவுடன் ரொமான்ஸ் பண்ணும் நமிதா - வைரலாகும் புகைப்படங்கள்..!


தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நமீதா. கதாநாயகியாக அறிமுகமாக இவரின் உடல் எடை திடீர் என அதிகரித்ததால் படவாய்ப்புகளை இழந்தார். 
 
இதன் காரணமாக வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காததால், சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக மாறினார். இந்நிலையில் கடந்த ஆண்டு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மக்களிடம் சில சர்ச்சைகளை சந்தித்தார்.
 
பின் இவரை சுற்றி, சில வதந்திகள் வெளியானதால். திடீர் என காதலர் வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் செட்டில் ஆனார். திருமணத்தை தொடர்ந்து இவர் படங்களில் நடிக்க வில்லை என்றாலும். அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். 
 
தற்போது, அரசியலிலும் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார். அதன் பின்னர் எந்தவித அரசியல் கட்சி கூட்டத்திலும் தலையிடாமல் இருந்தார்.
 
தற்போது இன்று சென்னை ஒரு விழாவில் கலந்து கொண்ட நமிதா அங்கு வந்திருந்த பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் நமீதா பாஜகவில் இணைத்து கொண்டார்.
 
 
இந்நிலையில், 2021 புத்தாண்டை தன்னுடைய தோழியும், நடிகையுமான காதல் சந்தியா மற்றும் அவரது குடும்பதினருடன் கொண்டாடியுள்ளார். அப்போது, அவருடன் ரொமான்ஸ் செய்வது போன்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள்.. என்ன கன்றாவி டா இது என்று மீம்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.