கண்கள் சொருகும் அளவுக்கு குடி - கணவருடன் மது கோப்பையுடன் காஜல் அகர்வால்..!

 
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி திருமணம் நடந்தது. 
 
திருமணத்திற்கு பிறகு கணவருடன் புது வீட்டில் குடியேறினார் காஜல். பின்னர் மாலத்தீவுகளுக்கு தேனிலவுக்கு சென்றுவிட்டு வந்தார். நாடு திரும்பியதும் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டார். 
 

அழகிய கண்கள் - பளபளக்கும் தோல்

 
காஜல் மற்றும் அவர் கணவரை கேக் வெட்ட வைத்து வாழ்த்து தெரிவித்தது படக்குழு. காஜல் அகர்வாலின் பெயரை சொன்னாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அவரின் அழகிய கண்களும், பளபளப்பான தோலும் தான். இந்நிலையில் தலைமுடி மற்றும் தோலுக்கு என்ன பயன்படுத்துவீர்கள் என்று காஜலிடம் சமூக வலைதளத்தில் கேட்கப்பட்டது. 
 
 
அதற்கு அவர் அளித்த பதில் தான் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலோவெரா ஜெல் தான் பயன்படுத்துவேன் என்று கூறியுள்ளார் காஜல். 


 
அவரின் பதிலை பார்த்தவர்கள் தலைமுடியையும், தோலையும் மெயின்டெயின் செய்வது இவ்வளவு சுலபமா என்று தெரிவித்துள்ளனர்.
 
இந்தியன்-2, ஹேய் சினாமிகா மற்றும் ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் திருமணம், ஹனிமூன் என 3 மாதங்களுக்குப்பிறகு மீண்டும் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் அரட்டையடிக்கத் தொடங்கியிருக்கிறார். 
 

கண்கள் சொருகும் அளவுக்கு குடி

 
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய காதலரான கவுதம் கிச்சுலுவுடன் தான் டேட்டிங் செய்த ஆரம்ப கால படங்களையும் பகிர்ந்துள்ளார். அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விருந்து நிகழ்ச்சியில் எடுத்த போட்டோ இது என்று தெரிவித்துள்ளார். 
 
 
அந்த போட்டோவில் காஜல் அகர்வாலும், கெளதம் கிச்சுலுவும் கையில் மது கிளாஸ் வைத்திருக்கிறார்கள்.

கண்கள் சொருகும் அளவுக்கு குடி - கணவருடன் மது கோப்பையுடன் காஜல் அகர்வால்..! கண்கள் சொருகும் அளவுக்கு குடி - கணவருடன் மது கோப்பையுடன் காஜல் அகர்வால்..! Reviewed by Tamizhakam on January 20, 2021 Rating: 5
Powered by Blogger.