பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலான "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலுக்கு குடும்ப ரசிகர்கள் தாண்டி இளவட்ட ரசிகர்களும் அதிகம் என்று தான் கூற வேண்டும்.
இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இளம் நடிகர் வெங்கட் ரங்கநாதன். பாண்டியன் ஸ்டோர்ஸ் தவிர சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ தொடரிலும் வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இவருக்கு நடிகர் விஜய் வீட்டில் இருந்து அழைப்பு வந்திருந்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை விரும்பிப் பார்க்கும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா தான் அதற்கு காரணம் என்று கூறியிருந்தார் வெங்கட்.
இந்நிலையில், தற்போது ரோஜா சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் ஸ்மிருதி காஷ்யப் உடன் இவர் தளபதி விஜய்யின் கண்டாங்கி கண்டாங்கி பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
மேலும் இதனை ஸ்மிருதி காஷ்யப் பதிவிட்டு, வெங்கட் தளபதி விஜய்யின் தீவிரமான ரசிகர் என குறிப்பிட்டுள்ளார்.


