அந்த விளம்பரத்தில் நடித்த தமன்னா - பாய்ந்த வழக்கு - விளக்கமளிக்க உத்தரவு..!


சூது என்றாலே அது கவ்வியே தீரும் என்பது பழமொழி. அந்த வகையில், சமீப காலமாக விஸ்வரூபம்எடுத்துள்ளது ஆன்லைன் ரம்மி விவகாரம். ஒரு காலத்தில் ரம்மிவிளையாடுவதையே தடை செய்தது நீதி மன்றம். அதன் பிறகு, பணம் கட்டி விளையாடினால் தான் தவறு என்று கூறியது. 
 
இந்நிலையில்,சமீப காலமாக ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனை தொடர்ந்து ஆன் லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்து மத்திய அரசு தீவரமாக பரிசீலனை செய்து வருகின்றது. 
 
நிலைமை இப்படி இருக்க, நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் இப்படியான சூதாட்ட விளையாட்டுகளுக்கு விளம்பரம் நடித்துக்கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இது இளைஞர்கள் தவறாக வழி நடத்தும். 
 
மற்ற நடிகர்களை கூட விட்டு விடலாம், நடிகர் பிரகாஷ் ராஜ்-ஐ எடுத்துக்கொள்ளுங்கள். இவர் மத்திய அரசை விமர்சிக்காத நாள் கிடையாது. என்னமோ நான் தான் இந்த உலகத்தின் ரட்சகன் என்னும் ரேஞ்சுக்கு மத்திய அரசையும், பிரதமர் திரு.மோடியையும் விமர்சிப்பார். 
 
ஆனால், அப்படியே இந்த பக்கம் பார்த்தால் ஆன்லைன் ரம்மிக்கு விளம்பரம் செய்து கொண்டிருப்பார். இப்படி சினிமாவை தாண்டி நிஜத்திலும் டபுள் ஆக்ட் கொடுக்கும் நடிகர்களை அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். 
 
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரங்களில் நடித்தது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கேட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னா மற்றும் நடிகர் அஜூ வர்கீஸ் ஆகியோருக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானவை என்றும், பிரபலங்களாக இருப்பவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், போலி வாக்குறுதிகளுடன் பார்வையாளர்களை ஈர்த்ததாகவும் அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோலி, தமன்னா, அஜூ வர்கீஸ் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த விளம்பரத்தில் நடித்த தமன்னா - பாய்ந்த வழக்கு - விளக்கமளிக்க உத்தரவு..! அந்த விளம்பரத்தில் நடித்த தமன்னா - பாய்ந்த வழக்கு - விளக்கமளிக்க உத்தரவு..! Reviewed by Tamizhakam on January 27, 2021 Rating: 5
Powered by Blogger.