"என்ன பண்றதுன்னு தெரியாம நடு ரோட்டுல நின்னேன்.." - மாஸ்டர் மகேந்திரன் உருக்கம்..!


நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் 'மாஸ்டர்'. இந்தப் படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 
 
ஆனால், போட்டியாக வந்த ஈஸ்வரன், பூமி ஆகிய படங்கள் எதிர்மறையான விமர்சனகங்ளை பெற்றதால் மாஸ்டர் பொங்கல் வின்னர் ஆனது. திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் மாஸ்டர் படத்தை ரசிகர்கள் விழா போன்று கொண்டாடினார்கள். 
 
படத்தை பார்த்த பலரும் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் சரியான விருந்தாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.இப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்து எல்லோராலும் பாராட்டப்படுபவர் மகேந்திரன். 
 
விஜய் சேதுபதி இளம் வயதில் எப்படி சமூக விரோதியாக மாறுகிறார் என்பதே பிளாஷ்பேக்காக வரும்.ரேகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'வெட்டி பசங்க' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசும்போது, "மேடையில் என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கொரோனாவிற்கு பிறகு இது என்னுடைய முதல் மேடை. 
 
‘மாஸ்டர்’ திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. அனைவரும் கூறியதுபோல், நடிகர் விஜய்சேதுபதி யார் மனதையும் புண்படும்படி பேச மாட்டார். கேக் வெட்டிய சர்ச்சையில் அவர் இங்கு இருந்திருந்தால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டிருப்பார். அவருக்கு பதிலாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்றார். 
 

நடுரோட்டில் நின்னேன்

 
மேலும், ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர் சிறுவயதில் நாட்டமை படத்தில் அறிமுகமானது, அப்புறம், எனக்கு 15 வயதாகும் போது அடுத்து என்ன செய்யபோகிறேன் என்று தெரியாமல் நடு ரோட்டில் நின்றது.இப்போது, மாஸ்டர் படத்தில் நடித்துள்ளது என என் வாழ்க்கையில் இந்த மூன்று கட்டங்களையும் மறக்கவே மாட்டேன்.
 
ஒரு கட்டத்தில் படத்தின் விநியோகஸ்தரிடம் மதிப்பில்லாமல் போனது வருத்தமளித்தது எனவும், தனக்கு திரையரங்கில் சரியான காட்சிகளை கொடுக்காமல் போனதால் வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது எனவும் கூறியுள்ளார் மகேந்திரன்.
 
மாஸ்டர் படத்தின் மூலம் ஒரு ப்ரேக் கிடைத்துள்ளது இவருக்கு. இனி இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

"என்ன பண்றதுன்னு தெரியாம நடு ரோட்டுல நின்னேன்.." - மாஸ்டர் மகேந்திரன் உருக்கம்..! "என்ன பண்றதுன்னு தெரியாம நடு ரோட்டுல நின்னேன்.." - மாஸ்டர் மகேந்திரன் உருக்கம்..! Reviewed by Tamizhakam on January 20, 2021 Rating: 5
Powered by Blogger.