ப்ரியா பவானி ஷங்கருக்கு அந்த பாக்ஸ் தேவையில்லை - பிரபல நடிகர் பேட்டி..!
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார்.
அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது.
அதனையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஜீவா, அருள்நிதி நடிக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இந்தியன் 2 , துல்கர் சல்மான் உடன் ஒரு படம் என படு பிசியாக கேப் இல்லாமல் நடித்து வருகிறார்.
நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்துள்ள படம் 'களத்தில் சந்திப்போம்'. பல வருடங்களுக்குப் பிறகு ஜீவா நடிக்கும் ஒரு படத்தை அவரது அப்பா ஆர்பி சவுதிரி, சூப்பர் குட்ஸ் ஃபிளிம்ஸ் சார்பாகத் தயாரித்துள்ளது.
இதில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், ப்ரியா பவானி சங்கர், ராதாரவி, ரோபோ சங்கர், பால சரவணன், ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேலராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ், பெனிடோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் அருள்நிதி சமீபத்தில் பேட்டி ஒன்றில் நான் உயரமாக இருப்பதால் என்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு ஒரு ஆப்பிள் பாக்ஸை படப்பிடிப்பு தொடங்கும் முதல் நாளே கொடுத்து விடுவேன்.
அதில் ஏறி நின்று தான் என்னுடன் நடிப்பார்கள். ஆனால், ப்ரியா பவானி ஷங்கரும் உயரம் என்பதால் அவருக்கு ஆப்பில் பாக்ஸ் தேவைப்படவில்லை என்று கூறியுள்ளார்.
ப்ரியா பவானி ஷங்கருக்கு அந்த பாக்ஸ் தேவையில்லை - பிரபல நடிகர் பேட்டி..!
Reviewed by Tamizhakam
on
January 30, 2021
Rating:
