"கணவரை வேவு பார்க்கத்தான் அதை செய்தேன்.." - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய சமந்தா..!


திருமணத்திற்கு பிறகு சினிமா கேரியரில் ஜெயித்த சொற்ப நடிகைகளில் மிக முக்கியமானவர் சமந்தா. தெலுங்கு திரையுலகின் முன்னணி கலைக்குடும்பமான நாகார்ஜுனாவின் மூத்த மருமகளாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து கலக்கி வருகிறார். 
 
நீண்ட நாட்களாக கொரோனா லாக்டவுனால் வீட்டிற்குள் முடங்கி கிடந்த சமந்தா சமீபத்தில் மாலத்தீவிற்கு காதல் கணவர் உடன் ஜாலியாக ஒரு விசிட் அடித்தார். அங்கு ஜாலி டேவை என்ஜாய் செய்ததோடு மட்டுமின்றி ஹாட் பிகினி டூ பாத்டாப் குளியல் வரை பல போட்டோக்களை தட்டிவிட்டு சோசியல் மீடியாவை சூடேற்றினார். 
 
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா, தனது உடற்பயிற்சி வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது பிட்னெஸ் ரகசியம் குறித்தும் பேசுகிறார். 
 
இந்த நிலையில் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சாட்டிங் செய்த சமந்தா, தான் ஜிம்மில் இணைந்தது ஏன் என்பது குறித்த ரகசியத்தையும் போட்டு உடைத்தார். 
 
இதுகுறித்து அவர் கூறும்போது, “யாருக்கும் சொல்லாத ரகசியத்தை இங்கே உங்களிடம் சொல்கிறேன்.. நான் ஏன் ஜிம்மில் இணைந்தேன் தெரியுமா..? ஏனென்றால் என் கணவர் நாகசைதன்யாவும் இந்த ஜிம்மிற்கு வருவது தான் வழக்கம். அவர் இங்கே என்ன செய்கிறார்.. 
 
நிஜாமாகவே வொர்க் அவுட் செய்கிறாரா..? என சோதனை செய்வதற்காகவே நானும் இந்த ஜிம்மில் இணைந்தேன். என ரசிகர்களிடம் ஜாலியாக கூறியுள்ளார் சமந்தா.

"கணவரை வேவு பார்க்கத்தான் அதை செய்தேன்.." - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய சமந்தா..! "கணவரை வேவு பார்க்கத்தான் அதை செய்தேன்.." - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய சமந்தா..! Reviewed by Tamizhakam on January 30, 2021 Rating: 5
Powered by Blogger.