நடிகை வரலக்ஷ்மிக்கு திருமணம் - மாப்பிள்ளை யாரு தெரியுமா..?
தமிழ் சினிமாவில் வரலட்சுமி சரத்குமார் போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அறிமுகமான முதல் படத்திலேயே தனது வெற்றியும் கண்டார். அதன் பிறகு சினிமாவில் பல கதாபாத்திரங்களில் தோன்ற ஆரம்பித்தார்.
இவரது திரை வாழ்க்கையில் நடிப்பிற்காக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் என்றால் அது தாரை தப்பட்டை திரைப்படம் தான். இப்படம் பாலா இயக்கிய படமாக இருந்தாலும் வரலட்சுமியின் நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பிறமொழிப் படங்களிலும் தனது தனித்திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார். இப்போது தெலுங்கில் கூட இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
என்னதான் இருந்தாலும் வரலட்சுமி பிற மொழியில் 1, 2 படங்கள் மட்டுமே கைவசம் வைத்துள்ளார். ஆனால் தமிழில் மற்ற நடிகைகள் பொறாமை படும் அளவிற்கு ஏகப்பட்ட படங்கள் வெளிவர உள்ளன அதுமட்டுமில்லாமல் புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக பிரபல நடிகரும், பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சரத்குமார் - ராதிகாவின் மகள் ரயன் கிரிக்கெட் வீரர் அபினவ் மிதுனை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், வரலட்சுமி சரத்குமாரும் கிரிக்கெட் வீரரை கரம் பிடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வரலட்சுமி தரப்பில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை வரலக்ஷ்மிக்கு திருமணம் - மாப்பிள்ளை யாரு தெரியுமா..?
Reviewed by Tamizhakam
on
January 20, 2021
Rating:
