அனுஷ்காவின் வாய்ப்பை கெடுக்கும் முன்னணி நடிகர் - சினிமாவை விட்டே விரட்டி அடிக்க திட்டம்..?


சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுஷ்கா ரெட்டி, ஹீரோக்களுக்கு இணையாக தனி ஒரு ஹீரோயினாக பல படங்களின் வசூல் சாதனையை மிரள விட்டிருப்பார். 
 
குறிப்பாக அருந்ததீ, பாகமதி, பாகுபலி போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்குப் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் அனுஷ்கா ரெட்டி படாதபாடுபட்டு வருகிறார். 
 
தற்போது பல படங்களில் கமிட் ஆகியிருக்கும் அனுஷ்கா ரெட்டிக்கு, ஹீரோக்களால் பின்னடைவு ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஏனென்றால் குணசேகரன் இயக்கத்தில் சகுந்தலை புராண கதையில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கவிருந்தார். 
 
ஆனால், அந்தப் படத்திற்கு கதாநாயகனாக துஷியந்தன் மன்னனின் கதாபாத்திரத்திற்கு எந்தப் பெரிய ஹீரோக்களும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லையாம். 
 

 
ஆனால் 60 வயதுக்கு மேற்பட்ட ஹீரோக்கள் கூட காஜல் மற்றும் ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகளுக்கு ஜோடி சேர மட்டுமே ஆர்வம் காட்டுகின்றார்கள். ஆகையால் அனுஷ்காவிற்கு ஹீரோக்களின் மத்தியில் சப்போர்ட் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். 
 
அதுமட்டுமில்லாமல் எழுத்தாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அனுஷ்காவை மனதில் வைத்து எந்த ஸ்கிரிப்டும் உருவாக்கவில்லை. மேலும் ஹீரோக்கள் அனுஷ்காவை சினிமாவில் இருந்து தூக்கி வீசுவது போல் தெரிகிறது. 
 
இதற்கு முக்கிய காரணம், அரசியல், சினிமா என இரண்டு பக்கமும் பெரிய பலம் கொண்ட ஒரு முன்னணி நடிகர் தான் என்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு, அவருக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா மறுத்ததால் இப்படி பழி வாங்குகிறார் என கிசுகிசுகிறது அக்கட ஸ்டேட்டு சினிமா வட்டாரம்.
 
எனவே அனுஷ்கா சகுந்தலம் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்ததால், சகுந்தலை ஆக நடிக்க சமந்தாவை படக்குழு தேர்வு செய்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி வருகிறது. 
 
சினிமாவில் அவருக்கு அமைக்கப்படும் கதாபாத்திரத்தில் பெண்களை மையமாக வரும் படங்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டி வயது ஒரு காரணமாக இருப்பதால் சில ஹீரோக்கள் ஒதுக்கி விடுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனுஷ்காவின் வாய்ப்பை கெடுக்கும் முன்னணி நடிகர் - சினிமாவை விட்டே விரட்டி அடிக்க திட்டம்..? அனுஷ்காவின் வாய்ப்பை கெடுக்கும் முன்னணி நடிகர் - சினிமாவை விட்டே விரட்டி அடிக்க திட்டம்..? Reviewed by Tamizhakam on January 25, 2021 Rating: 5
Powered by Blogger.