"இதை பண்ணுங்க பாப்போம்..." - கீர்த்தி சுரேஷிற்கு சவால் விட்ட மீனா..!


தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி திரைப்படம் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யப்பட வைத்தார்.
 
மகாநடி படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து ராக்கெட் வேகத்தில் மார்க்கெட்டும் எகிறியது. 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு சவால் விடுத்துள்ளார். 
 
சமூக வலைதளங்களின் மூலமாக புதிய புதிய சவால்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் சற்றும் நிலை தடுமாறாத கீர்த்தி சுரேஷ் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 
 
மீபத்தில் பெண்குயின், மிஸ் இந்தியா போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர். 
 
விஜய், மகேஷ்பாபு, ஸ்ருதிஹாசன் என தமிழ், தெலுங்கு சினிமா பிரபலங்கள் இந்த சவாலில் பங்கேற்றனர். இந்நிலையில் நடிகை மீனாவும் இந்த சவாலில் பங்கெடுத்து மரம் நட்டு படத்தை வெளியிட்டுள்ளார். 
 
 
மேலும், மஞ்சு வாரியர் கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு இந்த சவாலை ஏற்கும் படி கூறி இருக்கிறார்.

"இதை பண்ணுங்க பாப்போம்..." - கீர்த்தி சுரேஷிற்கு சவால் விட்ட மீனா..! "இதை பண்ணுங்க பாப்போம்..." - கீர்த்தி சுரேஷிற்கு சவால் விட்ட மீனா..! Reviewed by Tamizhakam on January 21, 2021 Rating: 5
Powered by Blogger.