கள்ளகாதலியுடன் ஊர் ஊராக சுற்றிய இளம் நடிகர் - இறுதியில் நடந்த சம்பவம்...!


கன்னட சினிமாவை சேர்ந்த இளம் நடிகர் ஒருவர் அங்கு பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழிலும் சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். 
 
இவர் நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் மண்ணை கவ்வி தோல்வி அடைந்தது. அவருக்கு அந்த படம் தான் தோல்வியே தவிர அந்த படத்தில் நடித்த மும்பையை சேர்ந்த இளம் நடிகையுடனான கெமிஸ்ட்ரி ஹிட் ஆகிவிட்டது. 
 
படப்பிடிப்பின் போதே நடிகையுடன் அடிக்கடி அவுட்டிங், டேட்டிங் என்று பொழுதை கழித்து வந்துள்ளார். வழக்கமாக நடக்க கூடியதுதான் என்று நடிகரின் நலம் விரும்பிகளும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டனர். ஆனால், படம் முடிந்தும் நடிகையே சரணம் என சுற்றி சுற்றி வந்துள்ளார் நடிகர். 
 
அந்த நடிகையோ அவருக்கு திருமணம் ஆனது தெரிந்தும் அவருடன் ஊர் ஊராக சுற்றி வந்துள்ளார். கொரோனா லாக்டவுனால் பல மாதங்களாக சந்தித்து கொள்ளாமல் இருந்த இந்த ஜோடி தற்போது மீண்டும் சந்தித்து கொண்டுள்ளது. 
 
இதனை தொடர்ந்து தங்களுடைய காதலை கொண்டாட உதகமண்டலம் வந்துள்ளனர். விஷயம் அறிந்த மனைவி உடனடியாக உதகைக்கு விரைந்து வந்து தன்னுடைய உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு நடிகரை நையப்புடைத்துள்ளார். 
 
உதகைக்கு நடிகை மட்டும் தானே வந்தார்.. உறவினர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று கேட்க்கிறீர்களா..?.. அந்த நடிகைக்கு உதகை தான் சொந்த ஊரே. இங்கு வேறு ஒரு பெண்ணுடன் நடிகர் சுற்றி திரிவதை பார்த்த உறவினர்கள் தான் நடிகைக்கு தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளனர். 
 
ஆனால், கள்ள காதலியை கூட்டிக்கொண்டு தனது மனைவியின் சொந்த ஊருக்கே கூட்டிச்சென்ற அந்த இளம் நடிகரின் மன தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும். 😂😂😂

கள்ளகாதலியுடன் ஊர் ஊராக சுற்றிய இளம் நடிகர் - இறுதியில் நடந்த சம்பவம்...! கள்ளகாதலியுடன் ஊர் ஊராக சுற்றிய இளம் நடிகர் - இறுதியில் நடந்த சம்பவம்...! Reviewed by Tamizhakam on January 23, 2021 Rating: 5
Powered by Blogger.