அருவியில் அப்படி இப்படி குளியல் - அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை வெளியிட்ட புகைப்படங்கள்..!


தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி வருபவர் சனுஷா. இவர் பீமா, ரேனிகுன்டா, எத்தன், அலக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். 
 
மேலும் தெலுங்கு சினிமாவில் நானி நடித்த ஜெர்சி திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் கொடுத்து இன்று நாயகியாக நடித்து வருபவர் நடிகை சனுஷா. 
 
இவர் திரிஷா விக்ரம் நடித்த பீமா படத்தில் திரிஷாவுக்கு தங்கையாக நடித்திருப்பார், மேலும் ரேணி குண்டா, எத்தன் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது மலையாள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 
 
இவர் படங்களில் நடித்து பிரபலமானதை காட்டிலும் இவரை பற்றி வெளியான செய்திகள் மூலம் தான் பிரபலமானார். ஒரு முறையில் ரயிலில் பயணம் செய்யும் போது இரவு நேரத்தில் சக பயணி ஒருவர் தன்னை தொடக்கூடாத இடத்தில் தொட்டு தடவினார். நான் உதவிகேட்டு அலறிய போதும் யாரும் உதவ முன்வரவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன்பிறகு, இவர் கார் விபத்தில் இறந்துவிட்டதாக ஒரு தகவல் தீயாக் பரவியது. கூடவே, இவரது கார் அப்பளம் போல் நொறுங்கியிருக்கும் புகைப்படம் ஒன்றும் வைரலானது. ஆனால், அது என்னுடைய கார் இல்லை என்றும் நான் நலமுடன் உள்ளேன் என்றும் ஒரு வீடியோவை வெளியிட்டார் அம்மணி.

 
அடுத்ததாக, கொரோனா லாக்டவுனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானதாகவும் இதனால் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தேன் எனவும் பிறகு மெல்ல மெல்ல அந்த எண்ணத்தில் இருந்து மீண்டு வந்தேன் என்றும் கூறினார்.
 

 
இப்படி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இவர் மலையாளத்தில் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அருவியில் ஆனந்த குளியல் போடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

அருவியில் அப்படி இப்படி குளியல் - அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை வெளியிட்ட புகைப்படங்கள்..! அருவியில் அப்படி இப்படி குளியல் - அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை வெளியிட்ட புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on January 24, 2021 Rating: 5
Powered by Blogger.