"நெஞ்சமெல்லாம் புண்ணா இருக்கு தம்பி..." - காதலருடன் நெருக்கமாக ப்ரியா பவானி ஷங்கர் - புலம்பும் ரசிகர்கள்..!
'குருதி ஆட்டம்’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘பொம்மை’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ப்ரியா பவானி சங்கர். இப்போது கரோனா ஊரடங்கினால் எந்தவொரு படத்தின் பணியும் இல்லை என்பதால் வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்து வருகிறார்.
‘மான்ஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி சங்கர் இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது காதலர் ராஜின் பிறந்த நாளுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.
“மேயாதமான்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் இதற்கு முன் செய்திவாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வந்தார்.
இவர் கடின உழைப்பே இவர் நடிகையாக மாறியதற்கு தற்போது முக்கிய காரணமாகும். பிரியா பவானி சங்கரின் சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை பிரியா பவானி சங்கர் எப்போதுமே குடும்ப பாங்கான வேடங்களில் ஏற்று நடித்து அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்.
மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பிரியா பவானி சங்கர் மீடியா மீதான ஆர்வத்தில் தந்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் ஆனார். அதன் பிறகு புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஸ்டார் ஆன்கராக வலம் வந்த பிரியா பவானி சங்கருக்கு விஜய் டிவி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலில் நடித்த பிரியா பவானி சங்கர் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார். இந்நிலையில், தன்னுடைய காதலரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த அவரது ரசிகர்கள் நெஞ்சமெல்லாம் புண்ணா இருக்கு தம்பி என்று மீம்களை பறக்கவிட்டு தங்களது சோகத்திற்கு மருந்து போட்டு வருகிறார்கள்.
"நெஞ்சமெல்லாம் புண்ணா இருக்கு தம்பி..." - காதலருடன் நெருக்கமாக ப்ரியா பவானி ஷங்கர் - புலம்பும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
January 31, 2021
Rating:
