"வயசு வெறும் நம்ம தான்.." - சினேகா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!

 
தன்னுடைய வசீகரிக்கும் சிரிப்பால் புன்னகை அரசி என்று பெயர் பெற்றவர் நடிகை சினேகா.
 
‘புன்னகை அரசி’ என்றும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்ளுக்கு பொருத்தமானவர் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை சினேகா 2001 ஆம் ஆண்டு வெளியான என்னவளே என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். 
 
அதன் பின்னர், விஜய், மாதவன், கமலஹாசன் என்று பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக மாறி விட்டார். இவர் தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கின்றார்.
 
பின்னர், நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். நட்சத்திர தம்பதிகளாக தமிழ் திரையுலகில் இருவரும் வலம் வந்தனர். அதன் பின்னர், சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கின்றார். 
 
அவரது உடல் எடை அதிகரித்தது. இவர்களுக்கு விஹான் என்ற ஆண்குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு கதாநாயகி வாய்ப்பு அமையாததால் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 
 
சமீபத்தில், சிவகார்த்திகேயனுடன் ‘வேலைக்காரன்’ படத்தில் வந்தார். அதில், தான் நடித்த காட்சிகளை வெட்டி குறைத்து விட்டதாக அவர் அதிருப்தி வெளியிட்டது பரபரப்பானது. 
 
இந்நிலையில் கடந்த வருடம் சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்களது 2-வது குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டியிருப்பதாக நடிகர் பிரசன்னா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
 
 
தற்போது, உடல் எடை குறைத்துள்ள சினேகா மீண்டும் ஒல்லியாகி சிக்கென மாறியுள்ளார். இந்நிலையில், உடலோடு ஒட்டிய மஞ்சள் நிற உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள்,, வயசு வெறும் நம்பர் தான் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"வயசு வெறும் நம்ம தான்.." - சினேகா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! "வயசு வெறும் நம்ம தான்.." - சினேகா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 31, 2021 Rating: 5
Powered by Blogger.