"ஏகத்துக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்.." - அந்த நடிகரின் பெயரின் கேட்டதும் தெறித்து ஓடிய பண நடிகை..!


பொதுவாக மும்பையில் இருந்தும், கேரளாவில் இருந்தும் தான் இறக்குமதி ஆவார்கள். இந்நிலையில், தமிழ் சினிமாவுக்கு ஆந்திராவில் இருந்து இறக்குமதி ஆனவர் அந்த இளம் நடிகை. தன்னுடைய பெயரிலேயே பணத்தை வைதுள்ள அந்த நடிகைக்கு தமிழ் சினிமாவில் ஏக கிராக்கி. 
 
பொதுவாக வம்புநடிகருடன் ஒரு படத்தில் இணைந்து நடித்து விட்டால் அந்த நடிகையின் மார்கெட் உச்சத்திற்கு போகும் என்ற கோடம்பாக்க ஐதீகம் ஒன்று உள்ளது. வம்பு நடிகரின் படத்தில் குடும்ப குத்து விளக்காக தோன்றினார். 
 
இந்த படத்தின் மூலம் பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் பசுமரத்தாணி போல பதிந்து விட்டார் அம்மணி என்று தான் சொல்ல வேண்டும். ஏகப்பட்ட பட வாய்ப்புகள் தேடி ஓடி வருவதால் பொறுமையாக ஹீரோ யார்.. இயக்குனர் யார் என்று விசாரித்து படங்களை ஒப்புக்கொண்டிருகிறார். 
 
இவரிடம் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் படத்தின் கதை என்ன என்றே கேட்க மாட்டாராம். ஹீரோ மற்றும் இயக்குனர் யார் என்பது மட்டும் தான் கேள்வி. உடனே படத்தை ஓகே சொல்லி கையெழுத்து போட்டு விடுகிறார் அம்மணி. என்னதான் கதையை கேட்டாலும் அதில் ஹீரோயினுக்கு வேலையே கிடையாது என்பதை நன்கு உணர்ந்து வைத்துள்ளார் அம்மணி. 
 
அதனால், கதையை கேட்டு நேரத்தை வினாடிக்க விரும்பவில்லை என்று மேடையிலேயே ஓப்பனாக பேசினார் அம்மணி. இவரை நோக்கி பட வாய்ப்புகள் ஓடி வருவதற்கு காரணம் சம்பள விஷயத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொள்கிறாராம்.
 

மேலும், படத்திற்கு அவசியமோ.. இல்லையோ எந்த அளவுக்கும் இறங்கி கவர்ச்சி காட்டவும் அம்மணி ரெடி. இப்படி இருக்கும் பண நடிகையுடன் ஜோடி போட இன்னொரு பண நடிகர் ஆசைப்பட்டுள்ளார். 
 
ஆமாம், அந்த நடிகர் பெயரிலும் பணம் உள்ளது. பெயரில் மட்டுமல்ல ஆளே பெரிய இடத்து வாரிசு. ஒரு நடிகையுடன் ஜோடி போடவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் எவ்வளவு செலவானாலும் அந்த நடிகையுடன் ஜோடி போட்டுவிடுவார். 
 
தமிழ் சினிமாவில் உச்ச நடிகை ஒருவருக்கு படத்தின் பட்ஜெட்டை விட அதிக சம்பளம் கொடுத்து டூயட் பாடின வரலாறு எல்லாம் உண்டு. இந்நிலையில், பண நடிகையுடன் நடிக்க விரும்பி இயக்குனர் மூலம் தொடர்பு கொண்ட போது நடிகை முடியாது என சொல்லி விட்டாராம். 
 
காரணம், எப்படி வம்பு நடிகருடன் ஜோடி போட்டால் மார்கெட் உச்சத்திற்கு போகும் என்பது கோடம்பாக்க ஐதீகமோ.. அதே போல பண நடிகருக்கு ஜோடி போட்டால் அத்துடன் அந்த நடிகைக்கு மார்க்கெட் காலி என்பதும் கோடம்பாக்க ஐதீகம். இதனால், அந்த பண ஹீரோவின் பெயரை கேட்டதும் தெறித்து ஓடிவிட்டாராம் அம்மணி.

"ஏகத்துக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்.." - அந்த நடிகரின் பெயரின் கேட்டதும் தெறித்து ஓடிய பண நடிகை..! "ஏகத்துக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்.." - அந்த நடிகரின் பெயரின் கேட்டதும் தெறித்து ஓடிய பண நடிகை..! Reviewed by Tamizhakam on January 25, 2021 Rating: 5
Powered by Blogger.