பெண் ஊழியருடன் "பாதிரியார்" உல்லாசம் - மூதாட்டிகளிடமும் சில்மிஷதில் ஈடுபட்ட கொடூரம்..!


நெல்லை மாவட்டத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் பெண் ஊழியருடன் தனிமையில் உல்லாசமாக இருந்ததைப் பார்த்துவிட்ட சமையல்கார பெண்ணை பாதிரியார் கொலை வெறியுடன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நெல்லை மாவட்டம், பணகுடி அருகேயுள்ள ரோஸ்மியபுரம் எனும் ஊரில் ஹெர் மைன்ஸ் "Hermines Home for the Destitute" எனும் பெயரில் இளையோர் மற்றும் முதியோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. 
 
இங்கு சுமார் 30 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறியவர்கள் மற்றும் முதியோர்கள் தங்கியுள்ளனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோசப் ஈஸிதோர் (Joseph Isidore ) என்ற பாதிரியார் நிர்வாகம் செய்து வருகிறார். 
 
திசையன்விளை அருகிலுள்ள முதுமொத்தான்மொழி கோவில் தெருவைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவர் பல வருடங்களாகக் காப்பகத்தில் சமையல் வேலை செய்து வருகிறார். 
 
இந்த நிலையில், காப்பகத்தின் நிர்வாகி ஜோசப்புக்கும் அங்கு பணிபுரியும் ஜெயலெட்சுமி என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக தகாத உறவு இருந்துவந்துள்ளது. 
 
கடந்த 25'ம் தேதி காப்பகத்தில் உள்ள தனியறை ஒன்றில் ஜோசப்பும் ஜெயலட்சுமியும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, அந்த வழியாக வந்த சமையல் வேலை செய்யும் ராஜம்மாள் பார்த்துவிட்டார். 
 
இதனையடுத்து, இதனை வெளியில் சொல்லி விடுவார் என பயந்து ஜோசப் ஈஸித்தோர் மற்றும் ஜெயலட்சுமி சேர்ந்து ராஜம்மாள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். 
 
கடுமையாகத் தாக்கப்பட்ட ராஜம்மாள் அங்கிருந்து தப்பியோடி ராதாபுரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த ராதாபுரம் எஸ்.ஐ. சிவ பெருமாள் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த ராஜம்மாளிடம் விசாரணை நடத்தினார். 
 
ஜெயலட்சுமியுடன் ஜோசப் இருந்ததை தனிமையில் இருந்ததைப் பார்த்ததால் அவர்கள் தாக்கியதாக கூறியுள்ளார். மேலும், அந்த காப்பகத்தில் இருக்கும் முதிய பெண்களிடமும் பாதிரியார் தகாத செயலில் ஈடுபட்டு வந்ததாகவும், தன் வறுமை மற்றும் ஆதரவின்மை காரணமாக இத்தனை நாட்களாக அதை சகித்துக்கொண்டு இருந்ததாகவும் ராஜம்மாள் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 
 
ராஜம்மாள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ரோஸ்மியபுரம் இளையோர் மற்றும் முதியோர் காப்பாகத்தின் நிர்வாகத்தினை கவனித்து வரும் பாதிரியார் ஜோசப் ஈஸி தோர் மற்றும் ஜெய லட்சுமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இந்த சம்பவம் பணகுடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் ஊழியருடன் "பாதிரியார்" உல்லாசம் - மூதாட்டிகளிடமும் சில்மிஷதில் ஈடுபட்ட கொடூரம்..! பெண் ஊழியருடன் "பாதிரியார்" உல்லாசம் - மூதாட்டிகளிடமும் சில்மிஷதில் ஈடுபட்ட கொடூரம்..! Reviewed by Tamizhakam on January 29, 2021 Rating: 5
Powered by Blogger.