ஆரி கூட படம் பண்ணுவீங்களா..? - ரசிகரின் கேள்விக்கு லைவ்வில் பதில் கொடுத்த பிக்பாஸ் பாலாஜி..!


பிக் பாஸ் 4ன் மூலம் மிகப்பெரிய அளவும் பிரபலமடைந்தவர் என்றால் அது பாலாஜி முருகதாஸ் தான். அவர் அதற்கு முன் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தாலும் அவருக்கு மிகப்பெரிய அளவில் புகழ் பெற்று கொடுத்திருப்பது பிக் பாஸ் தான். 
 
பிக் பாஸ் வீட்டில் அவர் ஏற்படுத்திய சில சர்ச்சைகள் தற்போதும் அவரை பின்தொடர்ந்து வருகிறது. சனம் ஷெட்டி ஜெயித்த அழகி போட்டி டுபாக்கூர் எனவும் அதை தான் வெளியில் வந்து நிரூபிப்பதாகவும் பாலாஜி கூறி இருந்தார். 
 
அது பற்றி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போவதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜோ மைக்கேல் என்பவர் கூறி இருந்தார். அதன் படி சமீபத்தில் அவர் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அது பாலாஜியின் வீட்டுக்கும், வாட்ஸப்புக்கும் அனுப்பப்பட்டு இருந்தது. 
 
அதற்கான ஸ்க்ரீன் ஷாட்டையும் ஜோ மைக்கேல் வெளியிட்டு இருந்தார். இந்த சர்ச்சைக்கு தற்போதைக்கு முடிவு கிடைக்கும் நிலை இல்லை என அனைவரும் பேசும் அளவும் தற்போது ஜோ மைக்கேல் ஒரு விஷயத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். 
 
அதில் தான் பாலாஜி உடன் போனில் பேசிய விஷயத்தை ஆடியோவாக வெளியிடப்போவதாக மறைமுகமாக கூறியுள்ளார் அவர். எதனை பேர் அதற்காக காத்திருக்கிறீர்கள் என்று அவர் கேட்டிருக்கிறார். 
 

 
இந்நிலையில், நேரலையில் ரசிகர்களுடன் உரையாடிய பாலாஜி முருகதாஸ் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில், ஆரி அர்ஜுனன் உடன் இணைந்து நடிப்பீர்களா என்கிற கேள்வியை ஒரு ரசிகர் எழுப்ப, கண்டிப்பா நடிப்பேன். 
 
ரெண்டு பேருக்கும் நல்ல கதாபாத்திரத்தோட கதை அமைஞ்சா சேர்ந்து பண்ண வேண்டியது தான். ஆரி அண்ணன் கூட எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வீட்டில் யார் கூடவும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவங்க விளையாடின கேம் காரணமாத்தான் சண்டை போட்டோம்.

ஆரி கூட படம் பண்ணுவீங்களா..? - ரசிகரின் கேள்விக்கு லைவ்வில் பதில் கொடுத்த பிக்பாஸ் பாலாஜி..! ஆரி கூட படம் பண்ணுவீங்களா..? - ரசிகரின் கேள்விக்கு லைவ்வில் பதில் கொடுத்த பிக்பாஸ் பாலாஜி..! Reviewed by Tamizhakam on January 25, 2021 Rating: 5
Powered by Blogger.