"இந்த உடம்பை வச்சிக்கிட்டு அந்த காஸ்டியூம் அணிய முடியாது.." - ஜகா வாங்கிய அனுஷ்கா..!

 
அனுஷ்கா நடிக்க மறுத்த கதையில் சமந்தா நடிக்கும் விஷயம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரித்திர, புராண கதைகளை புத்தகத்தில் படிப்பதை விட, திரைப்படமாக பார்ப்பதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். 
 
ஏற்கனவே இந்த வகைப் படங்கள் கவனம் பெற்ற நிலையில் பாகுபலி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்குப் பிறகு இந்த வகை பீரியட் ஃபிலிம்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், சகுந்தலையின் கதை திரைப்படமாக தயாராகிறது. 
 
இந்தப் படத்திற்கு 'சகுந்தலம்' என்று பெயரிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர். 
 
 
சகுந்தலம் பட அறிவிப்பு சகுந்தலம் படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். குறிப்பாக கம்பீரமான கதாபாத்திரங்களுக்கும், புராண கதைகளுக்கும் அனுஷ்கா கச்சென பொருந்திப் போவார். 
 

இந்த உடம்பை வச்சிகிட்டு அந்த காஸ்டியூமா..?உதாரணமாக அருந்ததி, ருத்ரமாதேவி, பாகுபலி அனுஷ்காவின் படங்கள் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் அனுஷ்கா இருவருமே 'சகுந்தலம்' படத்தில் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
 
உடல் எடை அதிகமாக இருப்பதால் புராண கதைகளில் வருவது போன்ற காஸ்ட்யூம்களை அணிய முடியாது என்ற ஒரே காரணத்திற்காக அனுஷ்கா இந்த படத்திலிருந்து விலகியுள்ளாராம். இதனால் அந்தப் படத்தில் நடிக்க சமந்தாவை தேர்வு செய்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

"இந்த உடம்பை வச்சிக்கிட்டு அந்த காஸ்டியூம் அணிய முடியாது.." - ஜகா வாங்கிய அனுஷ்கா..! "இந்த உடம்பை வச்சிக்கிட்டு அந்த காஸ்டியூம் அணிய முடியாது.." - ஜகா வாங்கிய அனுஷ்கா..! Reviewed by Tamizhakam on January 20, 2021 Rating: 5
Powered by Blogger.