"வாழ்கையில் இதை பண்ணா எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும்.." - DD சொல்வதை கேளுங்க..!


சின்னத்திரையில் டிடி என செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். கால் நூற்றாண்டை அவரது சின்னத்திரை பயணம் நெருங்கினாலும் இன்னமும் இளமை, புதுமை என மிளிர்வதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி.
 
விஜய் டிவியில் பல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இருக்கும்போதிலும், அந்த டிவி சேனல் பெயரை சொன்னவுடனே நமது நினைவுக்கு முதலில் வருவது டிடி என்ற திவ்யதர்ஷினி தான். 
 
அந்தளவுக்கு, அந்த சேனல் மட்டுமின்றி, ஊடக உலகிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் டிடி.நிகழ்ச்சி தொகுப்பாளர் பணி மட்டுமல்லாமல், பல்வேறு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். 
 
தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், எப்போதும் லைம்லைட்டிலேயே தன்னை நிலைநிறுத்தி வருவதில் அவருக்கு நிகர் அவரே தான். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. 
 
இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. 
 
நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். தொலைகாட்சியில் இவரை எப்படி துருதுருவென,ஆக்டிவாக இருக்கிறாரோ அதே போல தான் நிஜ வாழகையிலும் படு சுட்டியாக துருதுருவென இருக்கிறார். 
 
இதற்கு என்ன காரணம் என்ற ரகசியத்தை தன்னுடைய ஒரு வீடியோ மூலம் விளக்கியுள்ளார். வாழ்க்கையில் கஷ்டம் வரும் போதெல்லாம் என்ன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.  அதை நீங்களே கேளுங்கள்.
 


"வாழ்கையில் இதை பண்ணா எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும்.." - DD சொல்வதை கேளுங்க..! "வாழ்கையில் இதை பண்ணா எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும்.." - DD சொல்வதை கேளுங்க..! Reviewed by Tamizhakam on January 25, 2021 Rating: 5
Powered by Blogger.