இயக்குனர் பாலா மற்றும் நடிகர் RK சுரேஷ் மீது பாய்ந்த வழக்கு - என்ன காரணம்..?


தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த உலக சினிமாவிலேயே கதைக்கு கடுமையான பஞ்சம் நிலவுகின்றது. அதனால், வழக்கமான கதையில் இருந்து சற்றே வித்தியாசமாக இருந்தால் கூட அந்த படங்கள் ஹிட் அடித்துவிடுகின்றன.
 
கதை பஞ்சத்தை தாண்டி இப்போது ஒரு புது பஞ்சம் வந்துள்ளது. அது தான் படத்தின் தலைப்பு பஞ்சம். உலகத்தில் வார்த்தையே இல்லாதது போல கதைக்கு ஏற்ற தலைப்பு வைக்கிறேன் என வேறு யாரோ பதிவு செய்து வைத்துள்ள தலைப்பை படத்திற்கு வைத்து சிக்கலில் சிக்கி விடுகிறார் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள்.
 
அந்த வகையில், பி ஸ்டுடியோ என்ற நிறுவனத்திற்காக இயக்குனர் பாலாவும், இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் இருவரும் விசித்திரன் என்ற பெயரில் ஒரு படம் தயாரித்து வருகின்றனர். 
 
இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார். ஆனால் சிஎஸ்கே பிலிம்ஸ் சதீஷ்குமார், கடந்த 2015ம் ஆண்டே "விசித்திரன்" என்ற டைட்டீலை தான் கில்டு அமைப்பில் பதிவு செய்து கடந்த மார்ச் மாதம் வரை புதுப்பித்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
அதனால், "விசித்திரன்" என்ற தலைப்பில் பி ஸ்டுடியோ தயாரிக்கும் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை 14ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 
 
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குனர் பாலா, நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, வழக்கை வருகிற 25-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

இயக்குனர் பாலா மற்றும் நடிகர் RK சுரேஷ் மீது பாய்ந்த வழக்கு - என்ன காரணம்..? இயக்குனர் பாலா மற்றும் நடிகர் RK சுரேஷ் மீது பாய்ந்த வழக்கு - என்ன காரணம்..? Reviewed by Tamizhakam on January 20, 2021 Rating: 5
Powered by Blogger.