கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் வையாபுரி, தற்போதைய இளையதலைமுறை நடிகர்களுடனும் நடித்து வருகிறார்.
காமெடி நடிகராக மட்டுமே பரிச்சையமான வையாபுரி, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு காமெடி வேடங்களுடன் குணச்சித்திர வேடங்களுக்கும் கச்சிதமாக பொருந்துவார், என்ற நம்பிக்கையை பல இயக்குநர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், புத்தாண்டில் புது முயற்சி மேற்கொள்ளும் விதமாக போட்டோ ஷூட் ஒன்றை நடிகர் வையாபுரி நடத்தியுள்ளார். மிக வித்தியாசமான கெட்டப்போடு இருக்கும் வையாபுரியின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. பல MC'க்கள் அந்த புகைப்படங்களை வைத்து பல மீம்ஸ்களை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.
வையாபுரி “யாரு...ஹாலிவுட் நடிகரா இவரு, இல்லப்பா நம்ம ஊரு வையாபுரிப்பா...”, ”தினேஷ் கார்த்திக் செமயா இருக்காருல, யோவ் அது வையாபுரி யா” இப்படி பல வகையில் வையாபுரியின் போட்டோ ஷூட் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டு வருக்கிறார்கள்.
தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காகியுள்ளது வையாபுரியின் புகைப்படங்கள். பிரபல காஸ்ட்யூம் டிசைனர் சத்யா, வையாபுரி தோற்றத்தை இப்படி ஸ்டைலிஷாக மாற்றி இருக்கிறார்.
அதிலும் ஒரு MC அடுத்த லெவலுக்கு சென்றுள்ளார். வையாபுரியின் புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்-கிற்கு அனுப்பி ஸ்மார்ட்டா இருக்கனா நீயி என்று கூறுவது போலவும், அதற்கு தினேஷ் கார்த்திக் என்ன ம*று கண்னுடா உன்னுது.. அது வையாபுரிடா ம*ரே.. என்று ரிப்ளை செய்வது போலவும் ஒரு மீம்-ஐ உருவாக்கியுள்ளார்.
Tags
Actor Vaiyapuri