முன்னணி ஹீரோயின்களை மிஞ்சும் அனிகா - வைரலாகும் புகைப்படங்கள்..!


தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார். 
 
இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்று சரியாக அமைந்துவிட்டது. இதை தொடர்ந்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். 
 
இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. 
 
அஜித்தின் அடுத்த படத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பெரிய நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் அவரது புகைப்படங்களிலேயே தெரிகிறது என கோலிவுட்டில் இப்போதே பேச்சுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
  
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அனிகா வெள்ளை நிற உடையில் போஸ் கொடுத்து அந்த படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். 
 
இதை பார்த்த ரசிகர்கள் ஹீரோயின்களையே ஓவர் டேக் செய்துவிடுவார் போல இருக்கே என்று கூறி வருகிறார்கள்.

முன்னணி ஹீரோயின்களை மிஞ்சும் அனிகா - வைரலாகும் புகைப்படங்கள்..! முன்னணி ஹீரோயின்களை மிஞ்சும் அனிகா - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on February 17, 2021 Rating: 5
Powered by Blogger.