"5 வயசுல இருந்தே எனக்கு அந்த பிரச்சனை இருக்கு.." - காஜல் அகர்வால் பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!


தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். 
 
அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.இந்தியன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். 
 
அதன்பிறகு புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் கால்ஷீட்டை ப்ரியாக வைத்திருந்த காஜல் , தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில், காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள ஒரு பதிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனக்கு 5 வயது முதலே ஆஸ்துமா பிரச்சனை இருப்பதாக காஜல் அகர்வால் கூறியிருப்பது தான் அது. 
 
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பகிர்ந்துள்ள காஜல் அகர்வால், “எனக்கு 5 வயதில் ஆஸ்துமா இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு எனக்கு உணவுக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது நினைவிருக்கிறது. ஒரு குழந்தை பால் பொருட்கள், சாக்லெட் சாப்பிடக்கூடாது என்பது பாவம் தானே. 
 

 
நான் வளர்ந்த பிறகும் பிரச்சனை சரியாகவில்லை. ஒவ்வொரு முறையும் பயணிக்கும் போதும், பனி, தூசு, புகை போன்ற விஷயங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலோ ஆஸ்துமா பிரச்சனை பெரிதாகிவிடும். அதனால் நான் இன்ஹேலர் பயன்படுத்த தொடங்கினேன். 
 
அதன் பின்னர் பெரிய மாற்றத்தை உணர்ந்தேன்.இப்பொழுது எப்போதும் இன்ஹேலருடன் இருப்பதை உறுதி செய்து கொள்கிறேன். இதனால் என்னை ஒரு மாதிரி பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். 
 
நம் நாட்டில் பலருக்கு இன்ஹேலர் தேவைப்படுகிறது. ஆனால் அடுத்தவர்களின் ரியாக்ஷனுக்காக இன்ஹேலர் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அல்லது பொதுவில் இன்ஹேலர் பயன்படுத்த வெட்கப்படத் தேவையில்லை. 
 
இதை இந்தியா உணர, நான் இன்ஹேலர்களுக்கு எஸ் சொல்கிறேன் #SayYesToInhalers உடன் இணைய என் நண்பர்கள், குடும்பத்தினரைக் கேட்டுக்கொள்கிறேன். 
 
ஆஸ்துமா குறித்தும், இன்ஹேலர் பயன்பாடு பற்றியும் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் எனக்கூறி முதற்கட்டமாக உன்னி முகுந்தன், ஜான் ஆபிரகாம், சிரஞ்சீவி ஆகிய நடிகர்களை நாமினேட் செய்துள்ளார்.

"5 வயசுல இருந்தே எனக்கு அந்த பிரச்சனை இருக்கு.." - காஜல் அகர்வால் பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்..! "5 வயசுல இருந்தே எனக்கு அந்த பிரச்சனை இருக்கு.." - காஜல் அகர்வால் பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 09, 2021 Rating: 5
Powered by Blogger.