"அப்போ.. துப்பாக்கி படத்துல சொன்னது பொய்யா..?.." - காஜல் அகர்வாலை விளாசும் நெட்டிசன்ஸ்..!


தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் காஜல் அகர்வால். 
 
தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
 
சில தினங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லுவைத் திருமணம் செய்துகொண்டார் காஜல் அகர்வால்.போட்டோஷூட் நடத்துவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் அடிக்கடி போட்டேஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார். 
 
இதை தாண்டி இவரது ரசிகர்கள் பலரும் இவரது புகைப்படங்களை வெளியிட்டு கொண்டாடுவார்கள். சில நடிகைகளுக்கு மட்டும் தான் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள கணக்குகளை தாண்டி ரசிகர்கள் நிர்வகிக்கும் சமூக வலைதள கணக்குகளுக்கும் அதிக பாலோவர்கள் கிடைப்பார்கள். 
 

அப்படி பட்ட நடிகைகளில் காஜல் அகர்வாலும் ஒருவர். இந்நிலையில், பால்கனியில் நின்ற படி தம் அடிக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
 
இதை பார்த்த ரசிகர்கள் துப்பாக்கி படத்துல தம் அடிக்கமாட்டேன்ன்னு சொன்னதெல்லாம் பொய்யா கோபால் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

"அப்போ.. துப்பாக்கி படத்துல சொன்னது பொய்யா..?.." - காஜல் அகர்வாலை விளாசும் நெட்டிசன்ஸ்..! "அப்போ.. துப்பாக்கி படத்துல சொன்னது பொய்யா..?.." - காஜல் அகர்வாலை விளாசும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on February 11, 2021 Rating: 5
Powered by Blogger.