கீர்த்தி சுரேஷிற்கு டஃப் கொடுக்க வரும் பிரபல நடிகையின் மகள்..! - அழகு சும்மா அள்ளுதே..! - வைரல் பிக்ஸ்..!


தென்னிந்திய சினிமாவில் திறமையான நாயகி நடிகை என்கிற அங்கீகாரத்தை அனைத்து தரப்பிடமிருந்தும் குறுகிய காலத்தில் பெற்றுவிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். 
 
கீழ்வானம் சிவக்கும்' 'நெற்றிக்கண்', உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்த மேனகாவுக்கும் மலையாள இயக்குநர்-தயாரிப்பாளர் சுரேஷ் குமாருக்கும் மகளாகப் பிறந்தவர் கீர்த்தி. 
 
தன் தந்தை தயாரித்த சில மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் 2013-ல் வெளியான 'கீதாஞ்சலி' மலையாளப் படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்தார். 
 
முதல் படத்திலேயே இரட்டை வேடம் அமைந்தது. இந்நிலையில், பிரபல நட்சத்திர ஜோடிகளின் மகள் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ள நிலையில், வாரிசு நடிகையான கீர்த்திக்கு டஃப் கொடுப்பார் போல இருக்கே என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
 
 
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜீவிதா மற்றும் டாக்டர் ராஜசேகரின் மகள் தான், தமிழில் நாயகியாக அறிமுகமாக உள்ளார்.இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கவுள்ள இந்த படத்தில், கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
 
 
கௌதம் கார்த்திக் ஜோடியாக தான் ஷிவத்மிகா நடிக்கிறார்.மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சேரன், பிக்பாஸ் சரவணன், விஜய் டிவி ஜாக்லின், உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
 
 
கிராமத்து கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மார்ச் மாதம் முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

இந்த படத்திற்கு சித்து குமார் என்பவர் இசை அமைக்க உள்ளார். இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷிற்கு டஃப் கொடுக்க வரும் பிரபல நடிகையின் மகள்..! - அழகு சும்மா அள்ளுதே..! - வைரல் பிக்ஸ்..! கீர்த்தி சுரேஷிற்கு டஃப் கொடுக்க வரும் பிரபல நடிகையின் மகள்..! - அழகு சும்மா அள்ளுதே..! - வைரல் பிக்ஸ்..! Reviewed by Tamizhakam on February 12, 2021 Rating: 5
Powered by Blogger.