"என்னா கும்மு..." - பிச்சைக்காரன் பட நடிகை சாட்னா டைட்டஸ் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைகாரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலாமானவர் நடிகை சாட்னா டைட்டஸ். பிச்சைக்காரன் படம் மாபெரும் வெற்றிபெற்றதால் சாட்னா டைட்டஸ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 
 
பிச்சைக்காரன் படத்தில் நடிப்பதற்கு முன்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு குரு சுக்ரன் என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகியுள்ளார் சாட்னா டைட்டஸ். இவரது முதல் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து எய்தவன், திடம் போட்டு திருடுற கூட்டம் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார் சாட்னா டைட்டஸ். 
 
பிச்சைக்காரன் படம் மூலம்பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் முகவட்டு, வாட்ட சாட்டமான உடல் வாகு என ரசிகர்களின் நெஞ்சில் அம்பாய் பாய்ந்தார் அம்மணி. 
 
 
ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்தார். மெல்ல மெல்ல வளர்ந்து வந்த இவர் பிச்சைக்காரன் படத்தின் விநியோகஸ்தர் கார்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். 
 
வீட்டை விட்டு வெளியேறியதால், என் மகளை விநியோகஸ்தர் கடத்தி விட்டார் என்று போலீசில் புகார் கொடுத்தார் இவரது அம்மா. ஆனால், என்னை யாரும் கடத்த வில்லை நானே விரும்பி தான் வீட்டை விட்டு வெளியேறினேன் என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 
 
 
வழக்கம் போல இதை சுற்றி காது, மூக்கு வைத்து பல செய்திகள் உலா வந்தன. ஆனால், இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் திருமண வாழ்கையில் ஐக்கியமானார் அம்மணி. திருமணம் முடிந்த இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. 

இதுவரை அந்த குழந்தையின் புகைப்படம் வெளிவராத நிலையில் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
 
 
முட்டி வரை எரிய உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளஅவரை பார்த்த ரசிகர்கள் என்னா கும்மு .. திருமணத்திற்கு பிறகும் அழகு குறையாமல் இருக்கீங்க என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

"என்னா கும்மு..." - பிச்சைக்காரன் பட நடிகை சாட்னா டைட்டஸ் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! "என்னா கும்மு..." - பிச்சைக்காரன் பட நடிகை சாட்னா டைட்டஸ் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 28, 2021 Rating: 5
Powered by Blogger.